தனித்துப் போட்டியால் பாஜகவுக்கு எழுச்சி: பொன். ராதாகிருஷ்ணன் கருத்து
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று நாகர்கோவில் டதி பள்ளியில் வாக்களித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் மக்களை நம்பி பாஜக தனித்து போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மிகப்பெரிய முத்திரை பதிக்கும். தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வது மிகவும் வேதனையான ஒன்று. நேர்மையானவர்கள், ஏழைகள் வருங்காலத்தில் தேர்தலை சந்திக்க முடியுமா? என்பது கேள்விக் குறியாகியுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தனித்து நிற்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றார். ...