மீனவர்களுக்கு தனி வங்கி உருவாக்க நடவடிக்கை: கனிமொழி எம்.பி. உறுதி
மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் பேசி முயற்சி மேற் கொள்ளப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ரூ.25 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கும் பணிக்கு கனிமொழி எம்.பிஅடிக்கல் நாட்டினார். 12 மீனவர்களுக்கு ரூ.5.05 லட்சம் மானியத்தில் நாட்டுப் படகில் வெளிப்பொருத்தும் இயந்திரத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் மீனவர்களின் குறைகளை அவர்களின் பக்கம் நின்று கேட்டு நிறைவேற்றும் விதமாக திமுக அரசு செயல்படுகிறது. பல திட்டங்களை...
