தமிழகம்

சோழவந்தானில் பேரூர் திமுக சார்பில் வ உ சி86வது நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

173views
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேரூர் திமுக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்.வ.உ.சி. அவர்களின் 86 வது நினைவு நாளை ஒட்டி மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரி ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், குருசாமி, நிஷா கௌதமராஜா, முத்துச்செல்வி சதீஷ், செல்வராணி, சிவா, முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி, எஸ் எம் பாண்டி, பெரிய கருப்பன்ராஜா, அண்ணாதுரை, பெரியசாமி, முத்துவேல் ,மில்லர் நாகேந்திரன், சங்கங்கோட்டைசந்திரன் ,நாகராஜ் ,முருகன், கருத்தபாண்டி, கேபிள்அருண், மாரி உட்பட மாவட்ட, ஒன்றிய ,நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!