தமிழகம்

பயப்படாதே நான் இருக்கேன் தைரியமா இருக்கனும் நாய் குட்டிக்கு மழலை மொழியில் ஆறுதல் தெரிவித்த மதுரை பெருங்குடி சிறுவனின் வீடியோ ட்ரெண்ட்.

341views
மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி – பிரியங்கா தம்பதியினரின் குழந்தை மாதேஷ் (வயது 2 1/2)
சிறுவன் மதேஷிற்கு அவரது தாய்மாமன் பிரசாந்த் நாய்குட்டி ஒன்றை பரிசளிக்க வீட்டிற்கு வந்தார்.
பிரசாந்த் தனது சகோதரியின் வீட்டுக்கு திடீரென வந்து அட்டை பெட்டியில் பரிசாக நாய்குட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.
இதனால் மகிழ்ச்சியில் ஓடிவந்த சிறுவன் மாதேஷ் நாய்க்குட்டியை பார்த்து ஈடில்லா மகிழ்ச்சி அடைந்து அந்த நாய்க்குட்டியை பயப்படாதே நான் இருக்கேன் தைரியமாக இருக்கனும், என்றும், யாரும் டிஸ்டப் பண்ணக்கூடாது, அதுக்கு பசிக்குதுனு என்ன தேடி வந்துருச்சு போல என்றும், இந்த நாய்குட்டிக்கு நாய்னு பெயர் வைப்போம் என மழலைமொழியில் நாயை கொஞ்சி பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகிவருகின்றது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!