தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வெப்பச் சலனம் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். 19.5.2021 : நீலகிரி, சேலம், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்...
தமிழகம்

எழுத்தாளர் கி.ரா.வின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்: உறவினர்கள் தகவல்

எழுத்தாளர் கி.ரா.வின் உடல் புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கி.ரா.வின் சொந்த ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922ம் செப்டம்பர் 19ம் தேதி பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி என போற்றப்படுகிறார். 1958 ம் ஆண்டு முதல் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்தார். 7ம் வகுப்பே படித்து இருந்தாலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய இவர் சாகித்திய அகாதமி விருதை பெற்றவர். இவரது இலக்கியப் பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அவருக்கு வீட்டை அரசு அளித்துள்ளது . அவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் திவாகரன், இளைய மகன்...
தமிழகம்

கொரோனாவிற்கு இனிமேல் பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை…!

இனிமேல் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா சிகிச்சை முறைகளில் ஒன்றாக பிளாஸ்மா சிகிச்சை இருந்து வந்தது. பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் இருந்து, பிளாஸ்மாவை தானமாகப் பெற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்படுவதாகும். இந்நிலையில் இது தொடர்பாக, இந்த சிகிச்சை அறிவியல் சாராத பயன்பாடு மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது....
தமிழகம்

இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயம்.. எதற்கெல்லாம் அனுமதி..? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..? வெளியான முழு விவரம்..!

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பயணம் செய்வதற்கு இ-பதிவு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத ஊடங்ககும், மற்ற நாட்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. ஆனாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போது ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் வெளியில் பயணம் செய்வோர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் இ-பதிவு செய்வது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த இ-பதிவு முறை இன்று (17.05.2021) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய பணிகளான மருத்துவ சிகிச்சை, திருமணம், இறப்பு...
தமிழகம்

தஞ்சை முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. காங்கிரஸின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் தஞ்சை மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார். 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை தஞ்சை மக்களவை தொகுதி எம்பி-யாக இருந்தவர் இவர். சென்னை சாலிகிராமம் வீட்டில் உயிரிழந்த துளசி அய்யா உடல் சொந்த ஊரான பூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் மகன் வழிப் பேரன் ராமநாதனுக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகளுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது . இந்நிலையில் டிடிவி தினகரன் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ....
தமிழகம்

ஸ்டெர்லைட்டில் பாதிக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி: கோளாறை சரி செய்ய இஸ்ரோ நிபுணர்கள் வருகை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறால் ஆக்சிஜன் உற்பத்தி தடைபட்டுள்ள நிலையில் அதை சரி செய்ய இஸ்ரோ நிபுணர் குழு அங்கு விரைந்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டெர்லைட் நிர்வாகம், தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் இதை சரி செய்ய வந்துள்ள இஸ்ரோ நிபுணர் குழு சில ஆலோசனைகளை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு உற்பத்தியை தொடக்கியுள்ளது. இங்கு ஆக்சிஜன் உற்பத்தியை மட்டும் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. வியாழக்கிழமை ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக வெள்ளிக்கிழமை உற்பத்தி நிறுத்தப்பட்டது....
தமிழகம்

கூட்டாக விண்ணப்பித்தால் வீட்டு வாசலில் தடுப்பூசி! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

கூட்டாக விண்ணப்பித்தால் வீட்டு வாசலில் தடுப்பூசி! - சென்னை மாநகராட்சி அறிவிப்பு! சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒரே நிறுவனம், வளாகத்தில் உள்ளவர்கள் விண்ணப்பித்தால் நேரடியாக முகாம் அமைத்து தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். இநிந்லையில் தற்போது சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள நிறுவனங்கள், குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கூட்டாக தடுப்பூசிக்கு விண்ணப்பித்தால் அவர்களது இடத்திலே முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஒரே வளாகத்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்தால் முகாம் அமைக்கப்பட்டு 45 வயதிற்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

தமிழகத்துக்கு ரயிலில் மேலும் 27.6 டன் ஆக்சிஜன் வந்தது!

தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, முழு ஊரடங்கை கடுமையாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு பணிகள், ஆக்சிஜன் விநியோகம், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்டவை தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறார். இந்த நிலையில், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தில் தமிழகத்துக்காக மேலும் 27.6 டன் ஆக்சிஜன் ரயிலில் கொண்டு வரப்பட்டது. ஒடிசாவில் இருந்து...
தமிழகம்

மாநிலங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு 1.91 கோடி கோவிட் தடுப்பூசி ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்

மே 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை, இரண்டு வாரங்களுக்கு 1.91 கோடி டோஸ் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை தொடங்கப்பட்டு 118 நாட்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியை நெருங்கியுள்ளது. 17 கோடி இலக்கை, 114 நாட்களில் அடைந்ததன் மூலம், தடுப்பூசி போடுவதில், உலகளவில் இந்தியா வேகமான நாடாக உள்ளது. இந்தளவு தடுப்பூசிகளை போட அமெரிக்கா 115 நாட்களும், சீனா 119 நாட்களும் எடுத்தன. 'தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கோவிட்-19 தடுப்பூசி உத்தி' கடந்த மே 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி...
தமிழகம்

நெகிழ்ச்சி! மரணப்படுக்கையில் இருந்த தாய்க்காக பாட்டு பாடிய மகன்!!

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்த தாய்க்காக அவரது மகன் செல்போனில் வீடியோ கால் மூலம் பாட்டு பாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த கொரோனா காலத்தில் இறந்தவரின் முகத்தை கூட உறவினர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வைரஸ் என்று பேராபத்தால் இறுதி சடங்குகளை கூட செய்ய முடியவில்லை. அந்தவகையில் தான் இறக்கும் தருவாயில் இருந்த தனது தாயை செல்போன் வீடியோ கால் மூலம் பார்த்துள்ளார் அவரது மகன். தெற்கு டெல்லியைச் சேர்ந்த சங்கமித்ரா சாட்டர்ஜி (70) என்பவர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வாரத்துக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த போதிலும் , அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வந்தது . ஒருகட்டத்தில் , அவர் இறந்துவிடுவார் என்பதை அறிந்த...
1 483 484 485 486 487 492
Page 485 of 492
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!