தமிழகம்

தமிழகம்

ஓபிஎஸ் இல்லாத அதிமுக-வை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலை பதில்

ஓபிஎஸ் இல்லாத அதிமுகவை பாஜக ஏற்றுகொள்ளுமா என்ற கேள்விக்கு அண்ணாமலை, அதிமுக தொண்டர்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற ராம்நாத் கோவிந்த் பிரிவு உபச்சார விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அவருடன் எடப்பாடி பழனிசாமியும் உடன் இருந்தார். இந்நிலையில் பிரதமரை எடப்பாடி பழசாமி சந்திப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. திரெளபதி முர்மு இன்று குடியரசுத் தலைவராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்வில் எடப்பாடி பழசாமி கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அமித்ஷாவை சந்திக்க, வாய்ப்பு கிடைக்காததால் அவர் சென்னைக்கு திரும்புயுள்ளார் என்று எடப்பாடி பழசாமியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் சென்னை வரும்போது, அவருடன் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்....
தமிழகம்

கள்ளக்குறிச்சி வன்முறை: கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் தடயவியல் துறையினர் 3வது நாளாக ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் தடயவியல் துறையினர் 3வது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடைப்பெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். காவலர்கள் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமின்றி, பள்ளி வாகனங்கள், மேஜை , நாற்காலி, மாணவர்களின் சான்றிதழ் ஆகியவற்றை தீ வைத்து எரித்தனர். இதில் கிட்டத்தட்ட 67க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையானது, வன்முறையில் ஈடுப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவியின் உடலானது இரு முறை உடற்கூறாய்வு செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே...
தமிழகம்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி – இன்று முதல் வெளிநாட்டு வீரர்கள் வருகை: தமிழக கலாச்சாரப்படி வரவேற்பளிக்க அரசு ஏற்பாடு

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இன்று முதல் வெளிநாட்டு வீரர்கள் வருகைதர உள்ளனர். அவர்களுக்கு தமிழக கலாச்சாரப்படி சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்கி ஆக. 10 வரை நடைபெற உள்ளது. இதில், 187 வெளிநாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: போட்டிகளில் வீரர்கள் மற்றும் பார்வையாளர் என 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக மாமல்லபுரத்தில் நடந்து வரும் ஏற்பாடுகளை செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் குழுவினருடன் நேற்று ஆய்வு செய்தார். கடந்த ஜூன் மாதம் 19-ம்...
தமிழகம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு பெரம்பலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கலையரசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் தாலுகா, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, பள்ளியை அரசுடைமையாக்க வேண்டும். இந்த சம்பவத்தில்...
தமிழகம்

அதிமுக தலைமை அலுவலகம் போலீஸ் பாதுகாப்புடன் திறப்பு: சேதம், காணாமல் போன பொருட்களை மதிப்பிடும் பணி தொடக்கம்

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அதிமுக தலைமைஅலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திறக்கப்பட்டது. அதிமுகவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடும் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு பழனிசாமி தலைமையில் கடந்த 11-ம்தேதி சென்னை வானகரத்தில் அதிமுக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் வேளையில், பிரச்சார வாகனத்தில் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு திடீரென வந்தார். அப்போது அங்கிருந்த பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு பல்வேறு அறைகளை சேதப்படுத்தி, ஆவணங்கள் மற்றும் விலைமதிப்புள்ள ஜெயலலிதாவின் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அவர்கள்...
தமிழகம்

சென்னையின் 75% மக்களுக்கு பாதிப்பு! அலட்சியம் காட்டுவதா? மாநகராட்சிக்கு அன்புமணி கண்டனம்!

சென்னையில் மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக ஏற்படும் புழுதி மக்களுக்கு நோயை ஏற்படுத்தும் என்பதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளால் வரலாறு காணாத புழுதி உருவாகி சென்னை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. புழுதியையும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் கட்டுப்படுத்துவது இந்த வளர்ச்சித் திட்டங்களின் ஓர் அங்கமாக சேர்க்கப்பட்டிருக்கும் போதிலும், அது பின்பற்றப்படாதது கண்டிக்கத்தக்கது. சென்னையில் மாதவரம் - சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் & பூவிருந்தவல்லி என மூன்று வழித்தடங்களில் 121 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளும், சென்னையில்...
தமிழகம்

ஓ.பி.ரவீந்திரநாத்தின் அதிமுக எம்.பி. அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்: மக்களவைத் தலைவருக்கு இபிஎஸ் கடிதம்

ஓபிஎஸ் மகனும், தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரதுஅதிமுக எம்.பி. அந்தஸ்தை ரத்துசெய்யுமாறு மக்களவை தலைவருக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி தலைமைஅலுவலகத்தையும் சட்டப் போராட்டத்தின் மூலமாக பழனிசாமி கைப்பற்றியுள்ளார். இதற்கிடையே கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது இரு மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் மற்றும் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சியின் பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசனை பழனிசாமி நியமித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக...
தமிழகம்

மின் கட்டண உயர்வை கண்டித்து 23-ந்தேதி பா.ஜ.க. போராட்டம் -அண்ணாமலை அறிவிப்பு

தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அடுக்கடுக்காக பல சாக்கு போக்குகளை சொல்லி அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் 2 மாதங்களுக்கு 1,000 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை பயன்பெறுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. குறிப்பிட்டிருந்தது. ஆனால் இன்று தி.மு.க. அரசு, தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. அதேவேளை தி.மு.க. அரசு தனது திறனற்ற செயல்பாடுகளை மறைக்க மத்திய அரசை குறை கூறுவதை தமிழக பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவோம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ள பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவது நமது கடமையாகும். மாநில மின் பகிர்மான மையங்களில் சீர்திருத்தங்களை கொண்டு வர ரூ.3.03 லட்சம்...
தமிழகம்

அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்..?: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின் போது, தலைமை அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை. வழக்கு நிலுவையில் இருந்தாலும் சீல் வைக்க முடியாது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்சனை ஏற்படாது...
தமிழகம்

13,495 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. தற்போது இந்த மாணவ மாணவிகள் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, தற்போது வேலூர் மாவட்டத்திற்கு இலவச சைக்கிள்கள் வந்துள்ளன. மேலும் விரைவில் அம்மாவட்டத்தில் உள்ள 84 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 13,495 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
1 485 486 487 488 489 563
Page 487 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!