நுங்கம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், நுங்கம்பாக்கம் பகுதியில் சுரங்க கட்டுமானத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்3 வழித்தடங்களில் 118.9 கி.மீ.தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் சுரங்கம், உயர்மட்டப் பாதைக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது சுமார் 42 இடங்களில் பணிகள் நடக்கின்றன. இந்த 3 வழித்தடங்களில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் (45.8 கி.மீ.) முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் 19.1 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்டத்திலும், 26.7 கி.மீ. தொலைவுக்கும் சுரங்கத்திலும் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில், நுங்கம்பாக்கம் பகுதியில் சுரங்க கட்டுமானத்துக்கான ஆரம்பகட்ட பணிகள்தொடங்கியுள்ளன. ஸ்டெர்லிங் சாலை - கல்லூரி சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிக்காக, தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய 2 இடங்களில் சுரங்க...
