ஜூன் 28 முதல் கல்லூரி தேர்வுகள் தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!
தமிழகத்தில் பி.எட்., எம்.எட்., கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் இணையம் வழியாக வருகிற ஜூன் 28ம் தேதி துவங்கி ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும் என பல்கலை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது. தமிழக்தில் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் ஏதும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை வகுப்புகள் இணையம் வழியாகவே நடைபெற்று வருகிறது. அலகு தேர்வுகள், பருவத்தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் போன்ற அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுகிறது. தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் மே 10 முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆன்லைன் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் மாணவர்களுக்கான பி.எட்., எம்.எட் பருவத்தேர்வுகள் இணையம் வழியாக நடைபெறவுள்ளது. இந்த தேர்வானது வரும் ஜூன் 28ம் தேதி தொடங்கி அடுத்த...