மதுரை அப்போலோ மருத்துவமனையில் 51வயது நபருக்கு மாற்று கல்லீரல் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது
மூளைச்சாவு ஏற்பட்டவரின் கல்லீரலை பொருத்தி மதுரை அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்ததுள்ளது. இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவ குழுவினர்கள் கூறியதாவது, கடந்த நவ.16 அன்று தமிழ்நாடு உறுப்பு மாற்று வலையமைப்பு மூலம் மூளைச்சாவு ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நபரிடமிருந்து கல்லீரல் பெறுவதற்கான வாய்ப்பு குறித்த தகவல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கிடைத்தது. தகவல் கிடைத்த உடனேயே அறுவை சிகிச்சை குழுவானது இரண்டு அணிகளாகப் பிரிந்து வேகமாக செயலாற்றத் தொடங்கியது. ஒரு குழு அரசு மருத்துவமனையிலிருந்து கல்லீரலைப் பெற்று வருவதற்காக நவ.17ம் தேதி காலை 5 மணிக்கு அனுப்பப்பட்டது. அதேவேளையில் மற்றொரு குழுவினர் கல்லீரல் பொருத்த வேண்டியவருக்கான அறுவை சிகிச்சைக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டனர். மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரலின் ஏற்புத் தன்மை மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்டு சரியாக 10 மணிக்கு...
