மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சமஸ்கிருத-வேதமயமாக்கும் மோடி அரசு – சு.வெங்கடேசன் எம்.பி., நேர்காணல்
நவம்பர் 26 (இன்று) இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் ஆகும். இந்த நாளைக் கொண்டாடுவது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தையும் அது உறுதிசெய்துள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு உள்ளிட்ட விழுமியங்களையும் பாதுகாப்பதற்காக நாட்டு மக்கள் உறுதியேற்றுக் கொள்வதே ஆகும். ஆனால், ஒன்றிய பாஜக அரசு இந்த ஆண்டு நவம்பர் 26 அரசியலமைப்புச் சட்ட தினத்தையொட்டி, இந்தியா என்பது முழுக்க முழுக்க ஒரு வேத நாகரிக நாடு என்பதை நிறுவுவதற்கான குரூர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக இந்தியாவின் வரலாற்றையே திரித்து எழுதும் நோக்குடன், இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎச்ஆர்) மூலமாக கருத்துரு ஒன்றை உருவாக்கி அதை அனைத்து அரசுத் துறைகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றிற்கு அனுப்பி, அந்த கருத்துருவின் அடிப்படையில் உறுதியேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துமாறு வழிகாட்டியுள்ளது. ஐசிஎச்ஆர் உருவாக்கிய ‘‘பாரதம்: ஜனநாயகத்தின் தாய்’’ (பாரத் : லோக்...
