157views
குடும்ப சொத்து விபரங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய பிரச்சனைகளை, முறையாக எதிர்கொள்வதற்கென பல்வேறு சட்ட வழிமுறைகள் உள்ளன. அச்சமயங்களில் சட்டப்படியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களது உரிமைகளை கேட்டு பெற்றிட வேண்டும்.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரமானது சிவகங்கை மாவட்டத்தில் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டு, இதன் தொடர்ச்சியாக வட்டார அளவிலும், ஊராட்சி அளவிலும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்துதல், கோலபோட்டி, கருத்தரங்கம் நடத்துதல், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வீடியோப்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயல்பாடுகள் நடத்தப்பட்டு, சர்வதேச மனித ஒற்றுமை தினமான 20.12.2022 அன்று நிறைவு பெற உள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரங்களை மாவட்ட முழுவதும் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, அனைத்து சட்ட வழிமுறைகள் குறித்த கையேடுகளை துறைகள் ரீதியாக ஒருங்கிணைத்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுகளைச் சார்ந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது கைபேசி இணைப்பில் வாட்ஸ் ஆப் வாயிலாக பகிர்ந்தளித்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தங்களது கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தாங்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்.
You Might Also Like
தொல் தமிழர் பயிலரங்கம்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையினரால், வாகை 2026-உடன் இணைந்து தொல் தமிழர் பயிலரங்கம், 23 ஜூலை 2026 அன்று சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்வில்...
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின்...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு
23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை...
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அக்சிலியம் பெண்கள் கல்லூரியில் முத்தமிழ் விழா தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் விழா கோலாகலம்.
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் அக்சிலியம் பெண்கள் தனியார் (தன்னாட்சி) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முத்தமிழ்மன்றம் சார்பில் முத்தமிழ் விழா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன....
தமிழ் நாடக வார விழாவில் பார்த்த மற்றொரு நாடகம் நவபாரத் தியேட்டர்ஸின் ‘வீரா’
'வானொலி அண்ணா' மறைந்த கூத்தபிரான் நிறுவிய நாடகக் கம்பெனியை அவரது மகன் ரத்னம், பேரன் விக்னேஷ் ரத்னம் நடத்தி வருகின்றனர். சினிமா டைரக்டராக சரியான வாய்ப்புகள் அமையாத...




