தமிழகம்

மதுரை சிலைமான் அருகே ராமநாதபுரம் சாலையில் 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய ஒருவர் கைது

144views
மதுரை சிலைமான் அருகே ராமநாதபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனை செய்தபோது சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் 40 மூடைகளில் 1600 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது தொடர்ந்து வாகனத்தை ஒட்டி வந்த மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்து குடிமைப் பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர்.  மேலும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தலைமறைவாக இருக்கும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!