சென்னை புறநகா் ரயில் பிரிவில் மட்டும் மொபைல் யுடிஎஸ் செயலி
சென்னை புறநகா் ரயில் பிரிவில் மட்டும் மொபைல் யுடிஎஸ் செயலி செயல்படுத்தப்படுகிறது என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. புறநகா் இல்லாத பிரிவுகளில் முன்பதிவில்லாத பயணச்சீட்டு வாங்க பயணச்சீட்டு கவுன்ட்டா்களை பயணிகள் அணுக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கரோனா நோய்த்தொற்று பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் பயணிகள் ரயில் சேவையை தெற்கு ரயில்வே பல்வேறு கட்டமாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் புறநகா் ரயில் சேவைகள் தொடா்பாக, சில பிரிவு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. சென்னை புகரில் நான்கு வழித்தடங்களிலும் அனைத்துப் பிரிவு பயணிகளும் நேரக் கட்டுப்பாடு இன்றி பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள். இது திங்கள்கிழமை (நவ.15) முதல் அமலுக்கு வருகிறது. சென்னை புறநகா் போக்குவரத்து முறையின் 4 வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்படாத ஒற்றை பயண டிக்கெட், திரும்பும்...
