தமிழகம்

தமிழகம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக.. தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் அருகே உள்ள கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் வட மேற்கு திசையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது இது நான்காவது முறையாகும். மேலும் இந்த மாதத்தில் மட்டும் 29 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தமிழகம்

போலியோ முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள்நடைபெற்று வருகிறது. 5 வயதுக்கு உட்பட்ட 57.61 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து கொடுக்க தமிழக சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. இதில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம்.சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கை கழுவதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி முகாமில் பங்கேற்கலாம்.விடுபடும் குழந்தைகளை கண்டறிய, சொட்டு மருந்து வழங்கப்படும்...
தமிழகம்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ‘நிதி ஆயோக்’ குழுவினர் ஆலோசனை

முதல்வர் ஸ்டாலினை மத்திய நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் சரஸ்வத் தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.சரஸ்வத், சிறப்பு செயலர் கே.ராஜேஷ்வர ராவ், ஆலோசகர் பி.சாரதி ரெட்டி ஆகியோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, திட்டம், வளர்ச்சித் துறை செயலர் விக்ரம் கபூர், மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். முதல்வர் உடனான சந்திப்புக்கு பிறகு, நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மாநில திட்டக் குழு, நிதி ஆயோக் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. 2022-23 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல்...
தமிழகம்

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ-வாக உள்ள உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியைவிட 69 ஆயிரத்து 355 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். தன் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் முழுமையாக தெரிவிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும், என...
தமிழகம்

வளர்த்தவர்களை மறந்ததே அதிமுகவின் தோல்விக்கு காரணம்: சசிகலா பேச்சு

ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, ராமாவரம் தோட்டத்தில் ரத்ததான முகாமை சசிகலா தொடங்கி வைத்தார். பின்னர், தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: 50 ஆண்டுகால வரலாற்றில் அதிமுக இதுபோன்று தொடர் தோல்விகளை எப்போதும் கண்டதில்லை. எனவே, இத்தருணத்திலாவது அனைவரும் சிந்தித்து பார்த்து அதிமுகவின் நன்மை கருதி ஒற்றுமையோடு செயல்பட்டால் கட்சி நிச்சயம் வலிமை பெரும். விதைத்தவர்கள், வளர்த்தவர்கள், காப்பாற்றியவர்கள் என இவர்களை மறந்ததன் விளைவே இன்று கட்சி அனுபவித்துவரும் நிலை என்பதை கூறிக்கொள்கிறேன். ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு. இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்ற நிதர்சனத்தை புரிந்துகொண்டால் வரும் காலங்களில் நிச்சயம் வெற்றிபெறுவோம். நாம் ஒன்றிணைந்து கரம் கோர்ப்போம். இவ்வாறு பேசினார்.  ...
தமிழகம்

மூத்த பத்திரிகையாளர் முகம் மாமணி காலமானார்

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதியான முகம் மாமணி (91) காலமானார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட முகம் மாமணி, 1953-ல் விடுதலை நாளிதழில் அச்சுகோர்க்கும் பணியாற்றினார். பின்னர், 1956 முதல் 1991 வரை 36 ஆண்டுகள் எல்ஐசி-ல் பணிபுரிந்தார். 1982-ல் கே.கே. நகரில் இலக்கிய வட்டம் அமைப்பை ஏற்படுத்தி, மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சொற்பொழிவுக் கூட்டங்களை நடத்தினார். சிறு வயது முதலே எழுத்து, பேச்சில் ஆர்வம் கொண்ட முகம் மாமணி, 1983-ல் முகம் என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கி, 40 ஆண்டுகளாக நடத்தி வந்தார். தமிழறிஞர்கள் நாரண.துரைக்கண்ணன், கா.அப்பாத்துரை, கிஆபெ.விஸ்வநாதம் ஆகியோரின் வரலாற்றை முகம் இதழிலும், பின்னர் நூல்களாகவும் வெளியிட்டார். இவரது படைப்புகள் 22 நூல்களாக வெளிவந்துள்ளன. இவர் வயது மூப்பு காரணமாக கே.கே. நகரில் உள்ள இல்லத்தில் நேற்று காலமானார். அவரது...
தமிழகம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திமுக நிர்வாகியை தாக்கியதாக கைதான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்தது. அப்போது, சென்னை மாநகராட்சியில் 49வது வார்டுக்கு உட்பட ராயபுரம் பகுதியில் ஒருவர் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். திமுகவை சேர்ந்த நரேஷ் என்ற அந்த நபரை பிடித்த அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அவரை தாக்கி, சட்டையை கழற்றி அழைத்துச் சென்றனர். இதையடுத்து நரேஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 8 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஜெயக்குமார்...
தமிழகம்

தமிழகத்தில் இன்று ஒரு வார்டில் மட்டும் மறுவாக்குப்பதிவு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது முடிந்தது. அன்று இரவு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கையை மையமான புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கடந்த 22ஆம் தேதி புவனகிரி பேரூராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது, புவனகிரி பேரூராட்சி 4 வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுது அடைந்து. பின்னர் டெல் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சரிபார்த்தும், அதனை சரி பார்க்க முடியவில்லை. இதனால் 4வது வார்டு வாக்கு...
தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள் மற்றும் அன்னவாசல், அரிமளம், ஆலங்குடி, கீரனூர், கீரமங்கலம், கறம்பக்குடி, பொன்னமராவதி, இலுப்பூர் ஆகிய பேரூராட்சிகளில் கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன‌. இதில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அறந்தாங்கி நகராட்சியில் பதிவான வாக்குகள் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. புதுக்கோட்டை நகராட்சிக்கு வாக்கு எண்ணிக்கைக்காக 10 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு 10 வார்டுகளாக சுற்று வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டன. நகராட்சி மற்றும் 8...
தமிழகம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்

திமுக தொண்டரின் சட்டையை கழற்ற வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 19-ம் தேதி நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலின்போது, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டில் உள்ளஒரு வாக்குச்சாவடிக்குள் திமுகவைச் சேர்ந்த நரேஷ் குமார் என்ற நரேஷ் (33) அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர், நரேஷை மடக்கிப் பிடித்து தாக்கினர். அவரை அரை நிர்வாணமாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது. தாக்குதலில் காயமடைந்த நரேஷ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தண்டையார்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்....
1 496 497 498 499 500 563
Page 498 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!