தமிழகம்

தமிழகம்

தமிழக கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,043 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு: இந்து சமய அறநிலையத் துறை தகவல்

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,043 கோடி மதிப்புள்ள நிலங் கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் பி.கே.சேகர்பாபு, பல்வேறு மாவட்டங்களில் உள்ளகோயில்களில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமித்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்த வர்கள் மீது வழக்குப்பதிவு செய் யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, 540.39 ஏக்கர் நிலம், 496.1748 கிரவுண்டு சதுரஅடி மனைகள், 20.1434 கிரவுண்டு கட்டிடம்,46.2077 கிரவுண்டு திருக்குளக்கரைஆகியவை 991 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய மதிப்பு ரூ.2,043 கோடி ஆகும். குறிப்பாக, கும்பகோணம் மாவட்டம் ஒப்பிலியப்பன் கோயிலுக்கு அருகில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலுக்கு சொந்தமான 3.47 ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு விடப்பட்டிருந்த 6.9 ஏக்கர்நிலம் மீட்கப்பட்டது. திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில்...
தமிழகம்

விரைவில் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்: சேலம் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் உறுதி

விரைவில் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என சேலம் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று ஆத்தூர் ராணிப்பேட்டை, சேலம் தாதகாப்பட்டி, கோட்டை மைதானத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக தோல்வியடைந்தது. ஆனால், தமிழக மக்கள் திமுக-வை கைவிடவில்லை. வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் பல நல்ல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தந்துள்ளார். அதிமுக ஆட்சியை விட்டு சென்ற போது ரூ.5.75 லட்சம் கோடி கடனில் விட்டு சென்றதுடன், கஜானாவை காலி செய்து சென்றனர். இருப்பினும், மக்களுக்கு...
தமிழகம்

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமி

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக ஆட்சியில்தான் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "திமுக அரசு நம் தொண்டர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு வருகிறது. இது உழைப்பால் உயர்ந்த கட்சி. எதையும் சந்திக்க எங்களுக்கு திராணி உள்ளது. திமுகவின் 9 மாத ஆட்சியிலேயே மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்" என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "திமுகவிற்கு தைரியம் இருந்தால் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும். கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக ஆட்சியில்தான். எங்களது ஆட்சியில் காவல்துறையினருக்கு மதிப்பு இருந்தது. நீட் குறித்து விவாதிக்க நீங்கள் தயாரா என ஸ்டாலின் கேட்கிறார். காங்கிரஸ்...
தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு ….எதற்கெல்லாம் தளர்வுகள்? முழு விவரம்!

தமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள், உணவகங்களில் 100 சதவீதம் வாடிக்கையாளர்கள் இயங்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டம் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மழலையர் பள்ளிகள் சங்கத்தினர் தமிழக முதல்வரை சந்தித்து 2 ஆண்டுகளுக்கு மேல் பள்ளிகளை திறக்காமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த முறை...
தமிழகம்

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவில் கூறியிருப்பதாவது: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, 'புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். புற்றுநோயால் குணமடைவோரின் விகிதம் மேற்கத்திய நாடுகளில் 80 சதவீதமாகவும், இந்தியாவில் 65 சதவீதமாகவும் உள்ளது, இதை இன்னும் குறைக்க வேண்டும்' என்பதே இந்தஆண்டின் முக்கிய நோக்கமாகும். தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெண்கள் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல, ஆண்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்தான் அதிகம் இருக்கிறது. ஒரு லட்சம் பேரை சோதனை செய்தால், 97 பேருக்கு ஏதாவது ஒரு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஒரு லட்சம் பேரில் 63 பேர்...
தமிழகம்

சென்னை ஐசிஎஃப்-ல் 51 ‘வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிக்க இலக்கு

சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்-ல் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில், ரூ.97 கோடியில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும். ஆர்சிஎஃப் மற்றும் எம்சிஎஃப் தொழிற்சாலைகளில் மொத்தம் 95 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இப்பணிகள் இன்னும் இரு மாதங்களில் நிறைவடைய உள்ளன. இதையடுத்து, சென்னை ஐசிஎஃப்-ல் ஏற்கெனவே ரயில் வாரியம் அளித்துள்ள அனுமதியின்படி மொத்தம் 51 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
தமிழகம்

பிரச்சாரத்தில் விதிமீறல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட வேண்டும்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது விதிமீறல்கள் நடக்கிறதா என்பதை போலீஸார் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஒரேகட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு அளவில் செய்துள்ளது. அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கரோனா தடுப்பு விதிமுறைகளை வேட்பாளர்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பணம், பரிசு பொருட்களை கொடுத்து வாக்காளர்களை கவர நினைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும் வாகனங்களில் பரிசு பொருட்கள், அளவுக்கு அதிகமான பணம் கொண்டு செல்லப்படுகிறதா என பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி...
தமிழகம்

தமிழகத்தில் பயங்கரவாதம் தலையெடுக்கிறது: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

'பா.ஜ., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தி.மு.க., ஆட்சியில் பயங்கரவாதம் தலையெடுக்க துவங்கி விட்டதை உணர்த்துகிறது' என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். வானதி வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2007ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, தி.மு.க.,வினர் ஊர்வலமாக வந்து, பா.ஜ., அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இப்போது, பா.ஜ., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், பா.ஜ., அலுவலகம் தாக்கப்படுவதும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்வதும் வாடிக்கையாக உள்ளது. சம்பவம் நடந்த உடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை போலீசார், தண்ணீர் ஊற்றி கழுவி உள்ளனர். அவசரமாக தடயங்களை அழிக்க உத்தரவிட்டது யார் என்பதை, போலீசார் விளக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆரம்ப...
தமிழகம்

எனது தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுகிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், இன்று அதிகாலை கமலாலயத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு கரைகள் காவல்துறையால் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பான காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு மூலம் 6 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் குண்டு வீசியதாக கூறியுள்ளனர் என்றார். நீட் நிலைப்பாட்டை கண்டித்து குண்டு வீசியதாக கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது என்றும் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன் ரவுடிகளுக்கு வாழ்வு கிடைத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பாஜகவிற்கு உற்சாகம் தருகிறது, காரணம் கட்சி வளர்கிறது என்று அர்த்தம் என்றார். மேலும் குண்டு வீச்சு சம்பவம் யாரோ...
தமிழகம்

கோமியம் குடிக்க வைத்து சித்ரவதை; பெண் மருத்துவர் தற்கொலை; கணவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை உறுதி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில், அரசு மருத்துவரான அவரது கணவர், மாமியாருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையைசென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிபவர் மரியானோ ஆண்டோ புரூனோ(36). இவருக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்த அமலி விக்டோரியாவுக்கும்(32) கடந்த 2005-ல் திருமணம் நடைபெற்றது. ஒரு வருடம் வரை குழந்தை இல்லை என்பதால், பூஜைகள் நடத்தி, அமலியை கோமியம் குடிக்க வைத்துள்ளனர். பின்னர், கூடுதலாக வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். கடந்த 2007-ல் அமலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், அமலி விக்டோரியா பெயரில் இருந்த சொத்துகளை தங்களது பெயரில் எழுதி வைக்குமாறு கூறி, கணவர் வீட்டார் அமலியை சித்ரவதை செய்துள்ளனர். அமலி 2-வது முறையாக கர்ப்பமடைந்தபோது, அவரது கர்ப்பம் கலைந்துள்ளது....
1 498 499 500 501 502 563
Page 500 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!