தமிழகம்

தமிழகம்

28 ஆண்டுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு; வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தகவல்

வங்கக் கடலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர்எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். காலநிலை மாற்றம் காரணமாகதமிழகப் பகுதியில் பருவத்தே நடக்கக்கூடிய அனைத்தும் அண்மை காலமாக மாற்றமடைந்து வருகிறது. ஜனவரியிலும், பிப்ரவரியிலும் கனமழை பெய்கிறது. கடும்வறட்சி ஏற்படுகிறது. திடீர் வெள்ளம்ஏற்படுகிறது. ஓராண்டில் மழை பெய்யும் நாட்கள் குறைந்துவிட்டன. ஆனால் ஓராண்டில் பெய்ய வேண்டிய அளவு மழை குறுகிய நாட் களில் பெய்துவிடுகிறது. பருவம் தவறிய மழையால்டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர்கள் அறுவடை நேரத்தில் மழையால் அழுகி வீணாகின்றன. இவ்வாறு பருவம் தவறி மழை பெய்வது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், 'இந்து தமிழ் திசை'யிடம் கூறும்போது, ''மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவது அரிதானது தான்....
தமிழகம்

சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தால் சர்ச்சை: முக்கிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே தீவிர ஆலோசனை

சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற தேனி மாவட்ட நிர்வாகிகளின் தீர்மானத்தால் கட்சியில் மீண்டும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதுதொடர்பாக முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்களுடன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்ஸும் தனித்தனியே தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2019 மக்களவை தேர்தல், அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்வியை தழுவியது. திமுக ஆட்சியில், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. ஒவ்வொரு தேர்தல் முடிவு வெளியான பிறகும், 'ஒற்றை தலைமை வேண்டும். நீக்கப்பட்ட சசிகலா, தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும்' என்ற கோரிக்கைகள் அதிமுகவுக்குள் எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 'சசிகலாவை எக்காரணம் கொண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது'...
தமிழகம்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் புரட்டி எடுக்க போகும் கனமழை

தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை,...
தமிழகம்

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரையில் பள்ளி வேலை நாட்களாகும். மேலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரையில் செய்முறைத்தேர்வு நடத்தப்படும். அதே போல 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படும். மேலும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படும். 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மே...
தமிழகம்

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? வெளியானது அறிவிப்பு

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் எப்போது நடக்கவுள்ளதென்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அமைச்சர் இதுதொடர்பாக இன்று அறிவித்தவற்றில் குறிப்பிடப்பட்டவை: * செய்முறை தேர்வு: 10, +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு 25-04-2022ல் தொடங்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தொடங்கி மே 28-ம் வரை தேர்வு நடைபெறும் +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறும். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 6ஆம் தொடங்கி மே 30 -ம் தேதி வரை நடைபெறும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மே 5 முதல் மே 13 வரை நடைபெறும். தேர்வுகளைத் தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். ஜூன் 17ஆம்...
தமிழகம்

மன்னார்குடி நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர்மன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சென்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக 26, அதிமுக 4, அமுமுக 2, சுயேச்சை 1 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற நகர்மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் விழா, புதன்கிழமை மன்னார்குடி நகராட்சி கூட்ட அரங்கில் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான கே.சென்னுகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதனையொட்டி, கூட்ட அரங்கில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முதலில் திமுக உறுப்பினர்களும், பின்னர், அமமுக உறுப்பினர்களும், இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களும் கூட்ட அரங்கிற்கு வந்து தங்களது வார்டுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். வார்டு எண் வரிசைப்படி பதவியேற்புக்கு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர். முதலில்...
தமிழகம்

இன்று மாலை 6 மணி முதல் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்!

கோவை:ஈஷாவில் இன்று மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம். ருத்ராட்சத்தை வீட்டிலேயே இலவசமாக பெற்று கொள்ளலாம். கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா இன்று (மார்ச் 1-ம் தேதி) ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.இதனிடையே, ஆதியோகியின் அருளை பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.ருத்ராட்சத்துடன் சேர்த்து தியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி, ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்ற உதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆன்மீக சிறப்புமிக்க ருத்ராட்சத்தை ஒருவர் அணிவதன் மூலம் உடல் மற்றும் மனதளவில் சமநிலை பெற முடியும்.ஆரா தூய்மை பெறும். எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். மேலும், தியானம் செய்வதற்கும் இது...
தமிழகம்

தந்தத்துக்காக யானைகள் வேட்டை; தடுக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

'யானைகள் வேட்டையாடுவதை தடுக்க, கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கை, நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.யானை வேட்டை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை, நீதிமன்றம் அமைத்தது.சிறப்பு புலனாய்வுக் குழுவில், கேரள மாநில அதிகாரிகளை சேர்ப்பது குறித்து பதில் அளிக்க கோரப்பட்டது.வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, கேரள அரசு சார்பில், சிறப்பு பிளீடர் நாகராஜ் நாராயணன் ஆஜராகி, ''மலையாட்டூரில் 18 யானைகள் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த, பெரியாறு புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் மனு சத்யனை, குழுவில் நியமிக்க உள்ளோம்,''என்றார். இதையடுத்து, 'கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், யானைகள் வேட்டையை தடுக்க முடியும்....
தமிழகம்

உக்ரைனில் இருந்து 1,500 இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்: 23 மாணவ, மாணவிகள் தமிழகம் வந்து சேர்ந்தனர்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இச்சூழலில் அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய வெளியுறவுத் துறை தொடங்கியது. முதல் கட்டமாக உக்ரைன் எல்லையிலுள்ள ஐரோப்பிய நாடான ருமேனியாவில் இருந்து நேற்று முன்தினம், ஏர் இந்தியாவின் முதல் சிறப்பு விமானம் டெல்லி வந்தது. அதில் வந்த இந்தியர்களை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். இவர்களில் பெரும்பாலானவர்கள் உக்ரைனின் புக்வேனியன் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள். இவர்களில், நேற்று அதிகாலை முதல் மாலை வரை மூன்று விமானங்களில் சுமார் 1,500 மாணவர்கள் டெல்லி திரும்பியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 23 பேரும் இதில் இடம் பெற்றிருந்தனர். இதுகுறித்து உக்ரைனில் முதலாம் ஆண்டு பயிலும் சென்னை...
தமிழகம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், 2ம் தேதி டெல்டா மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வரும், 3ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பல இடங்களில் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலுார், அரியலுார், திருச்சி, கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும். திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கரூர், நாமக்கல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும்...
1 495 496 497 498 499 563
Page 497 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!