தமிழகம்

தமிழகம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை; 2 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: 200 ஏக்கர் வாழைத் தோப்பிலும் நீர் தேங்கியது

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 2 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. 200 ஏக்கர் வாழைத் தோப்பில் மழைநீர் தேங்கியுள்ளது. தஞ்சாவூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே பெய்த தொடர் கனமழையால் 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கடந்த 4 நாட்களாக மழை குறைந்ததால், வயலில் தேங்கிய தண்ணீர் வடியத் தொடங்கியது. வடிகால் முறையாக தூர் வாரப்படாததால், பல இடங்களில் தண்ணீர் வடிவதில் தாமதமாகி, பயிர்கள் அழுகத் தொடங்கின. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் கனமழை பெய்ததால் அம்மையகரம், செய்யாமங்கலம், பாதிரக்குடி, கழுமங்கலம், களர்பட்டி, அம்மன்குடி, அந்தலி, நடுக்காவேரி, அம்மன்பேட்டை, ஆற்காடு, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிதாக நடவு...
தமிழகம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை – புதுச்சேரி இடையே முழுமையாக கரையை கடந்தது

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது. புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. அதிகாலை 1.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஈரோட்டில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரியில் 19 செ.மீ, கடலூரில் 14 செ.மீ மழை பெய்துள்ளது. வட தமிழகத்தின் மேல் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்க கூடும் தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  ...
தமிழகம்

பொதுமக்கள் அவசர கட்டுப்பாட்டு எண்ணிற்கு அழைக்கலாம் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று பிற்பகல் முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கனமழை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் படகுகளும் தயார்...
தமிழகம்

இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (நவ.18) அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது: தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது, தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து நிலைகொள்ளக்கூடும். அரபிக் கடலில் கோவா அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இரு புறங்களிலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் நிலவுவதால், தமிழகத்துக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்...
தமிழகம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் மகா தேரோட்டம்: அரோகரா முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில்கார்த்திகை தீபத் திருவிழாவைஒட்டி மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதிவிழா தொடங்கி 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம், 7-ம் நாள் உற்சவத்தன்று நடைபெறும். இதில் பராசக்தி அம்மன் திருத்தேரை, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பர். இத்தகைய பிரசித்திப் பெற்ற மகா தேரோட்டம், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மாட வீதியில் நடைபெறவில்லை. அதற்கு மாற்றாக கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் (பஞ்ச மூர்த்திகள்) 5 திருத்தேர்களில் தனித்தனியே எழுந்தருளிபக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் மகா...
தமிழகம்

தமிழக பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை: அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தார்

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை சார்பில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அஸ்வின், துணைத் தலைவர் மருத்துவர் ராஜு பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: சிம்ஸ் - எஸ்ஆர்எம் மருத்துவ நிறுவனம் சார்பில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் வாகனம் தொடங்கி வைக்கப்படுகிறது. சபரிமலை அடிவாரத்துக்கு செல்லும் இந்த ஆம்புலன்ஸ் வாகனம், 2 மாத காலத்துக்கு அங்கேயே இருந்து தமிழக பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவசர உதவிக்கும் பயன்படும். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு...
தமிழகம்

டெல்லி வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா: தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்

டெல்லியில் நடைபெறும் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழாவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், ஆண்டுதோறும் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி நவ. 14முதல் 27-ம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு 'சுயசார்புஇந்தியா' என்ற கருப்பொருளில் நடைபெறும் 40-வது இந்தியப் பன்னாட்டுவர்த்தகப் பொருட்காட்சியை மத்தியஅமைச்சர் பியூஷ்கோயல் கடந்த 14-ம்தேதி தொடங்கி வைத்தார். இதில், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், செய்தி, சுற்றுலா, வேளாண்மை, தோட்டக்கலை, தொழில்,மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தொழில்வளர்ச்சி நிறுவனம், கைத்தறி துறை, தொழில் முன்னேற்ற நிறுவனம், சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அரசு, அரசு சார்பு துறைகள் பங்கேற்று,தங்கள் வளர்ச்சித் திட்டங்களை காட்சிப்படுத்தியுள்ளன. செய்தித் துறை சார்பில்அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்படங்கள், உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கீழடி...
தமிழகம்

ஊட்டி மலை ரயில் சேவை நவ.30 வரை ரத்து!

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ள, 100 ஆண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ளூர் வாசிகள் மட்டுமன்றி வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பயணம் செய்வது வழக்கம். கடந்த அக்டோபர் 23ஆம் தேதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகையை நோக்கி மலை ரயில் புறப்பட்ட நிலையில், பல்சக்கரம் இருப்பு பாதையின் மீது மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால் ,மலை ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து மண்சரிவை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து மலை ரயில் தண்டவாள பாதையில் பெரிய அளவிலான பாறைகள் உருண்டு...
தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆய்வு

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் , இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த நிலையில், அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்டா மாவட்டங்களை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இருவரும் ஆய்வு செய்ய உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கம்; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதல்வரின் முகவரி துறையில் மனுக்கல் தீர்வுக்காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் இறையன்பு வெளியிட்ட அரசாணையில், "முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு (ஐஐபிஜிசிஎம்எஸ்), உங்கள் தொகுதியில் முதல்வர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது. முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின்...
1 496 497 498 499 500 545
Page 498 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!