தமிழகம்

தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம்(பிப்ரவரி 19) அன்று தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது. இதற்காக மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில், இன்று(பிப்ரவரி 22) தமிழ்நாடு முழுவதும்...
தமிழகம்

திமுக நிர்வாகியை தாக்கியதாக வழக்கு: ஜெயக்குமார் கைது; சிறையில் அடைப்பு

நகர்ப்புறா உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுக நிர்வாகியைத் தாக்கிதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. அப்போது, சென்னை ராயபுரம் பகுதியில் ஒருவர் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக ஒருவரை அதிமுகவின பிடித்து தாக்கத் தொடங்கினர். அங்கே இருந்த ஜெயக்குமார், பிடிபட்ட நபரை தாக்க வேண்டாம் என்றும் அவருடைய கைகளை கட்டும்படி கூறினார். பிறகு, அந்த நபரின் சட்டையைக் கழட்டி அவருடைய கைகள் கட்டப்பட்ட நிலையில், அதிமுகவினருடன் சேர்ந்து ஜெயக்குமார் அந்த நபரை சட்டை இல்லாமல் சாலையில் நடக்கை வைத்து அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக முன்னாள் அமைச்சர் மற்று அதிமுக தொண்டர்களால்...
தமிழகம்

ஓட்டுச்சாவடிகளை ஆக்கிரமித்துள்ள திமுக.,வினர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னையில் ஒட்டுமொத்தமாக 40 ஓட்டுச்சாவடியை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: நகர்ப்புற தேர்தல் ஓட்டுப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. கோவை, சென்னையில் திமுக.,வினரால் பா.ஜ., வேட்பாளர்கள் அதிகம் தாக்கப்பட்டுள்ளனர். கோவை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலையில் பா.ஜ., வேட்பாளர்கள், தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டுமொத்தமாக 40 ஓட்டுச்சாவடியை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்திருந்தனர்.கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. மேலும், சில ஓட்டுச்சாவடிகளின் அருகிலேயே வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்....
தமிழகம்

சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் கோவையில் பிப்.27-ல் பறவைகள் கணக்கெடுப்பு: விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம்

கோவை ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் 10-வது ஆண்டாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி கோவையில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதுநிலை மூத்த விஞ்ஞானி பிரமோத் கூறியது: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குறிப்பிட்ட இடத்தை சுற்றியுள்ள பறவைகளை கணக்கெடுக்க வேண்டும். அதன்பின், https://ebird.org/home என்ற இணையதளத்தில்அன்றைய தினம் இரவு 7 மணிக்குள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதோடு, neasacon@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குழு புகைப்படம், தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும். குழுவாக 3 முதல் 4 பேர் இணைந்து இதில் பங்கேற்கலாம். இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க விரும்புவோர் http://bit.ly/saconbirdrace2022என்ற இணைப்பில் வரும் 26-ம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம். கணக்கெடுப்பில் பங்கேற்கும் குழுவின்...
தமிழகம்

தனித்துப் போட்டியால் பாஜகவுக்கு எழுச்சி: பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று நாகர்கோவில் டதி பள்ளியில் வாக்களித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் மக்களை நம்பி பாஜக தனித்து போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மிகப்பெரிய முத்திரை பதிக்கும். தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வது மிகவும் வேதனையான ஒன்று. நேர்மையானவர்கள், ஏழைகள் வருங்காலத்தில் தேர்தலை சந்திக்க முடியுமா? என்பது கேள்விக் குறியாகியுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தனித்து நிற்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.  ...
தமிழகம்

சென்னையில் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்த வாக்கு பதிவு

தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுகளுக்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில், உத்தேசமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் சென்னையில் தான் மிகக்குறைந்த அளவாக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளும், மூன்று மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. இதுவரை நடந்த முடிந்த தேர்தல்களில் 50 சதவீதத்தை தாண்டியே வாக்குப்பதிவாகியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 52.67 சதவீத வாக்குகளும், அதே ஆண்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயருக்கான வாக்குப் பதிவில் 52.67 சதவீத வாக்குகளும் பதிவாகின. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 59.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது. ஆனால், நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்...
தமிழகம்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிடுக- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தினை அமைத்திடும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (18-2-2022) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின்கீழ், அணு உலைகளிலிருந்து வெளியேறும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொது மக்களிடையே உள்ள கவலையை இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தத் திட்டத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஆறு அணுமின் உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த ஆறு அலகுகளில், அலகுகள் 1...
தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, நடிகர் விஜய் உள்ளிட்டோர் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே வாக்களித்தனர். உள்ளாட்சித் தேர்தல் அறிக 10 தகவல்கள்: > நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. > மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. >1369 மாநகராட்சி, 3824 நகராட்சி மற்றும் 7409 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 12,602 இடங்களுக்கு...
தமிழகம்

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருட்கள் வாங்கியதில் ரூ.12 ஆயிரம் கோடி ஊழல்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

'அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருட்கள் வாங்கியதில் ரூ.12 ஆயிரம் கோடிஊழல் நடந்துள்ளது' என்று தேர்தல்பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் நேற்றுஅவர் பேசியதாவது: கடந்த 9 மாதகால திமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பொய் சொல்கிறார். திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புகிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில்13 பேர், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொலை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை,மகன் கொலை குறித்து பழனிசாமிக்கு நினைவுபடுத்துகிறேன். பொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்தது யார்? கோடநாடு கொலை,...
தமிழகம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: நாளை வாக்குப்பதிவு: 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் விடியவிடிய தேர்தல் பறக்கும் படையினருடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்களும் வெளியேற்றப்பட்டனர். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால், தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்...
1 497 498 499 500 501 563
Page 499 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!