2022-23 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18-ம் தேதி தாக்கல்
தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் தொடங்குகிறது. அன்று, பேரவையில் அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பின், அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் பேரவைக் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும். அத்துடன் 2022-23 நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, 2021-22 ஆண்டுக்கான இறுதி துணை நிலை அறிக்கையை ஆகியவையும் பேரவையில் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும். வேளாண் பட்ஜெட் குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும். துறைரீதியான மானிய கோரிக்கையை...
