இன்று முதல் பள்ளி,கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.பின்னர்,தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கிய நிலையில்,மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் இன்று (பிப்.1ஆம் தேதி) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பள்ளிக்கு வர தடை. மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் கூட்டமாக அமர வேண்டாம். ஆசிரியர்களும், மாணவர்களும் நாள் முழுவதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.2 வேளை கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வகுப்பறை நுழையும்...
