3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்.மேலும்,இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை . இதுகுறித்து ,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த "விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020", "வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020'", "அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் |தங்கள் போராட்டத்தைத் துவங்கி இன்றுடன் 26.5.2021) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது. இன்றளவும் போராடும்...