மழைநீர் வடிகால், நீர்நிலைகளில் கழிவுநீர் விடும் லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை குடிநீர் வாரியம் பரிந்துரை
சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகளில் லாரிகள் கழிவுநீர் விடுவதை தடுக்க, அத்தகைய விதிமீறலில் ஈடுபடும் கழிவுநீர் லாரிகளின் உரிமத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பரிந்துரை செய்துள்ளது. சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட போரூர், அதைச் சுற்றியுள்ள பகுதியில் விதிகளை மீறி கழிவுநீர் லாரிகள், மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதை அடிப்படையாகக் கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை குடிநீர் வாரியம் தாக்கல்...