தமிழகம்

தமிழகம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இந்திய மக்கள் கூட்டமைப்பு சார்பாக நரிக்குறவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

பாபா சாகேப் அம்பேத்கர் உருவாக்கிய(SC & ST Federation of India) ஆதி திராவிடர் மற்றும் ழங்குடியினருக்கான இந்திய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக மகாபலிபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர்களுக்கு மாநில சிறுபான்மை பிரிவின் சார்பில் போர்வைகள் மற்றும் உணவு பண்டங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. சிறுபான்மை பிரிவின் மாநில செயலாளர் பிஷப். ஜான் ஏசு அடியான் தலைமையில்,  அமைப்பின் மாநிலத் தலைவர் முனைவர் மு.சா.சிங்க தமிழச்சி முன்னிலையில், மாநில ஊடகப் பிரிவின் செயலாளர் திருமதி. சசிலேகா, விசாரணை பிரிவின் தலைவர் திருமதி. லட்சுமி பிரியா மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கமெண்டோ அணி தலைவர் திரு வேலு,மற்றும் போதகர் விக்டர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் பயனடைந்தனர். மேலும் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் இந்நிகழ்ச்சிக்கு...
Uncategorizedதமிழகம்

மதுரையில் கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் கொடுக்க 350 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி.வீடியோ – ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்

மதுரை சிவகங்கை சாலையில் மேலமடை கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது இங்கு கோமதிபுரம், சீமான் நகர், மேலமடை, யாகப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும். யகப்பா நகர் பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் தனது கணவரால் கைவிடப்பட்டோர் பென்ஷன் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற சான்றிதழ் வாங்குவதற்காக விண்ணப்பித்து இருந்தார். கடந்த ஒரு மாதமாக கிராம நிர்வாக அலுவலகத்து நடையாய் நடந்தும் சான்றிதழ் கிடைக்காததால், தன்னார்வலர் இளைஞர் ஒருவரின் உதவியுடன் கிராம நிர்வாக பெண் அதிகாரி ரமணியிடம் சான்றிதழ் கேட்டு குறித்த போதுஅதற்கு லஞ்சமாக ஆயிரம் ரூபாய் கேட்டதாக தெரிய வருகிறது. முதல் தவணையாக 250 ரூபாயை ராம நிர்வாக அதிகாரி ரமணியிடம் கொடுத்தார். தலையாரி மலையான்டியிடம் 250 ரூபாய் கொடுத்து விட்டு செல்லுங்கள். விதவை சான்றிதழ் அடுத்த வாரத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று...
தமிழகம்

சர்வதேச பளு தூக்கும் போட்டி தங்கம் வென்ற பரமக்குடி வாலிபருக்கு வரவேற்பு

நேபாளத்தில் சர்வதேச பளுதூக்கும் போட்டி நவ.18ல் நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, எமனேஸ்வரத்தைச் சேர்ந்த பி.சி.ராமையன் 73 கிலோ எடை பிரிவில், 205 கிலோ எடையை லாவகமாக தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். சொந்த ஊர் திரும்பிய ராமையனுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பளித்தனர். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

சாத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து சென்னையைச் சேர்ந்த 2 பேர் பரிதாப உயிரிழப்பு

சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், பெத்துரெட்டிபட்டி விலக்கில் இன்று காலை, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஓடையில் பாய்ந்து கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்கரவர்த்தி (57) என்பவர் சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். ராக்லாண்ட் (60) என்பவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் சிக்கிய மேலும்...
தமிழகம்

தமிழகத்தில் எந்த அக்கா தம்பியும் பாஜகவை சேர்ந்த டெய்சி சரண் , திருச்சி சூரியா சிவா போல் இருக்க மாட்டார்கள் – மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் லெனின் பிரசாத் பேட்டி

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள தனக்குளம் பகுதியில் மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அணி சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 'கூட்டத்தில்.மதுரை காங்கிரஸ் கட்சி இளைஞர் அணியில் புதிதாக இணைந்துள்ள நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுடன் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் லெனின் பிரசாத் மற்றும் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் வைசாக் புதிதாக இளைஞர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார் . ஆலோசனை.கூட்டம் முடிந்த பின்னர் லெனின் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். காங்கிரஸ் கட்சியில் கே. எஸ். அழகிரி யினால் பிரச்சினைகளை குறித்த கேள்விக்கு இது கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பிரச்சனை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் இது சம்பந்தமாக முடிவெடுத்துள்ளார்கள். இதை டெல்லி தலைமை தலையிட்டு ஒரு முடிவு எடுப்பார்கள், முடிவை டெல்லி தலைமைதான் அறிவிக்கும் பாஜக மகளிர் அணி டெய்சி சரண் மற்றும் திருச்சி...
தமிழகம்

மதுரையில் அண்ணனின் நினைவு தினத்தில் பொதுமக்களுக்கு உணவளித்து, ரத்ததானம் நடத்தி அஞ்சலி செலுத்திய தம்பிகளின் உணர்வுபூர்வமானசெயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நல்ல மருது.இப்பகுதியில் இளைஞர் நற்பணி மன்றம் மூலம் சமூக சேவைகள் செய்துள்ளர். நல்ல மருது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். நல்ல மருது என்பவர்க்கு உடன் பிறந்த சகோதரர்கள் எஸ் ஆர் கோபி, போஸ் முத்தையா(திமுக கவுன்சிலர்), ஈஸ்வரன் என மூன்று தம்பிகள் உள்ளனர். அண்ணன் நல்ல மருது 2 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லாபுரம், மீனாட்சிநகர் பகுதியில் ரத்த தான முகாமை நடத்தி 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினார். இதற்கு முன்னதாக நல்ல மருதுவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதன் தொடர்ச்சியாக வில்லாபுரம், மீனாட்சி நகர் பகுதி வசிக்கும் 5000 மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மதுரையில் அண்ணனின் உடன் பிறந்த அண்ணனின்...
தமிழகம்

கொல்கத்தாவில் தேசிய கலை இலக்கிய விழா: கீழக்கரை சையத் ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர் தேர்வு

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் சாகித்யோத்ஸவ் எனும் தேசிய அளவிலான கலை இலக்கிய விழாவில் பங்கேற்க கீழக்கரை சையத் ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டிச. 2, 3, 4 ஆகிய தேதிகளில் இவ்விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அடுத்த வாரம் நடைபெறும் ஆசியாவின் இஸ்லாமிய இலக்கிய விழாவில் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளனர். மாணவர்கள் முஹமது வாஸில் ஆங்கில வினாடி வினா, முஹமது ஹவுரான் ஆங்கில பேச்சு, ஆங்கில வார்த்தை விளையாட்டு, உருது பேச்சு, ஆங்கில கை எழுத்துக்கு ஷபீக் ரஹ்மான் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். கடந்த மாதம் நடந்த மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தி தேசிய விழாவிற்கு தகுதி பெற்றனர்.  சாகித்யோத்ஸவ் என்பது சுன்னத் ஜமாத், மாணவர் கூட்டமைப்பு...
தமிழகம்

மதுரை மாவட்டம் பேச்சிகுளத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பேச்சிகுளம் அய்யனார்புரத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் நடராஜகுமார் மற்றும் உதவி இயக்குநர் சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி பேச்சிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி வாசு தலைமையில் துணைத் தலைவர் கார்த்திக் பாண்டி முன்னிலையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் தேன்மொழி, சிந்து, ராமலட்சுமி ஆகியோர் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல்,கன்று மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், சிகிச்சை பணி, மருந்து கொடுத்தும். மேலும் கால்நடைகளுக்கு எந்த மாதிரியான தீவனங்களை வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்தனர். கால்நடைகளுக்கு தடுப்பு கலவை, ஊறுகாய் புல்...
தமிழகம்

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 441 பொறியியல் துறை மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. விழாவில் முதல்வர் Dr. அல்லி வரவேற்புரை கூறினார். கல்லூரி முதுநிலை முதல்வர் Dr.சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.  ஹெக்ஸவர் டெக்னாலாஜி முதன்மை அலுவலர் ராம் சிங்கம் பள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  பென்குயின் முதன்மை செயல் அலுவலர் அன்பு கனி ஆகியோர் கலந்துகொண்டனர். ராம்சிங்கம் பள்ளி மாணவர்களிடம் கூறுகையில் கடின உழைப்பு மட்டுமே வெற்றுக்கான வழி கிடைக்கும். உங்களின் உழைப்போடு நின்றிடாமல் மேலும் வெற்றியை சாதனையாக்க வாழ்த்துக்கள்.  கிடைக்கும் வாய்ப்பை முறையாக பயன்படுத்தி சந்தோசப்படுங்கள்.  உங்களின் வெற்றிக்கு ஹெக்ஸவர் டெக்னாலாஜி துணையாக இருக்கும் என கூறினார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தெற்குதரவையில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம் ஒன்றியம் தெற்குத்தரவை கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. சிறந்த கால் நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடேரிக் கன்றுகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவி சாந்தி சாத்தையா பரிசு, சான்றிதழ் வழங்கினார். ராமநாதபுரம் உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள், செந்தமிழன், சாரதா, கால்நடை ஆய்வாளர் ஜெகதீஸ்வரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் பஞ்சவர்ணம் அடங்கிய குழு கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கினர்.  இம்முகாமில் 121 பயனாளிகளின் 190 மாடுகள், 385 வெள்ளாடுகள், 512 செம்மறி ஆடுகள், 110 கோழிகள் 6 நாய்கள் பயன் பெற்றன. செய்தியாளர்: காமேஷ் பாரதி,...
1 429 430 431 432 433 563
Page 431 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!