புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ஜெயக்குமார்
திமுக நபரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார் . அதன் பின் சாலை மறியல் , நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் . ஏற்கனவே திமுக நபரை தாக்கிய வழக்கு , சாலை மறியல் செய்த வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது . இதனால் கடந்த 21 ஆம் தேதியில் இருந்து புழல் சிறையில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்க அதிமுக தொண்டர்கள் நேற்று மாலை புழல் சிறை முன்பு கூடினர் . சிறைத்துறை விதிப்படி மாலை 6 மணிக்கு மேலாக கைதிகளை விடுவிக்க கூடாது. எனவே, மாலை 6.30 மணி வரை அமைச்சர் ஜெயக்குமார் பிணை ஆணையை...