தமிழகம்

கோவிலாங்குளம் அரசு பள்ளியில் தூய்மை நடை பயணம் மற்றும் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

188views
தமிழகம் முழுவதும் நேற்று தூய்மை நடைப்பயணம் மற்றும் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதவிகளுடன் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி முத்துராமன் தலைமையில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் தூய்மை நடைப்பயணம் மற்றும் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தும் விதமாக ஊர்வலமாக சென்றனர்.
இதில் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
செய்தியாளர்: உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!