சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு சாலைக்கு டெண்டர் அறிவிப்பு
சென்னை மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றிற்கிடையே கையெழுத்தானது. இத்திட்டத்தின்படி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கி.மீ. நீளத்திற்கு ரூ.5855 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படுகிறது. இந்த இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலையில் சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும், 13 இடங்களில் வாகனங்கள்...