தமிழகம்

தமிழகம்

தொடர் முழக்க போராட்டம்

இன்று ( 28 - 11 - 2022 ) திங்கள் கிழமை காலை - 11 மணிக்கு நான்காவது நாளாக நீதி கேட்டு தொடர் முழக்க போர்ட்டம் நடைபெற்றது.  தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தென்கரை பேரூர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் 4 வது வார்டு செயலாளர் இளையராஜா அவர்களின் வசித்து வந்த வீட்டை பெரியகுளம் வருவாய் துறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சேர்ந்து சுமார் 60 ஆண்டுகாலமாக வசித்து வந்த வீட்டை இடித்ததை கண்டித்து நீதி கேட்டு தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்திடம் நீதி கேட்டு வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள் மீது வண்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இளையராஜா குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க கோரியும் இடித்த வீட்டை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது....
தமிழகம்

சிறைவாசிகள் எந்தவித தொந்தரவும் இன்றி அவர்களது உறவினரிடம் இண்டர்காம் தொலைபேசி வசதி மூலம் பேசும் வசதியாக சுமார் 70,000ரூபாய் மதிப்பீட்டில் 15 க்கும் மேற்பட்ட இண்டர்காம் தொலைபேசிகள்

மதுரை மத்திய சிறையில் தற்போது சுமார் 2000 தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க சிறைவாசிகளின் உறவினர்கள் அளிக்கும் மனுக்கள் அடிப்படையில் ஏராளமானோர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கைதிகளிடம் அவர்களது உறவினர்கள் உரையாடும் போது இரைச்சல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகும். இதனை தொடர்ந்து சிறைக்கைதிகள் உறவினர்களுடன் நேர்காணல் செய்யும் அறையானது முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டு இன்று திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறைவாசிகள் எந்தவித தொந்தரவும் இன்றி அவர்களது உறவினரிடம் இண்டர்காம் தொலைபேசி வசதி மூலம் பேசும் வசதியாக சுமார் 70,000ரூபாய் மதிப்பீட்டில் 15 க்கும் மேற்பட்ட இண்டர்காம் தொலைபேசிகள், கண்ணாடி தடுப்பு அறைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முற்றிலும் நவீனமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இதுவரை தமிழக சிறைத் துறையில் புழல் மத்திய சிறை மற்றும்...
தமிழகம்

ராமநாதபுரத்தில் வானவில் மன்றம் திட்டம் துவக்கம்

நடுநிலை வகுப்பு மாணவர்களின் அறிவியல், கணிதம் ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது.  ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி பள்ளியில்  வானவில் மன்றத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். அரசு பள்ளிகளில் 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கருத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நடமாடும் அறிவியல், கணித பரிசோதனை ஏதுவாளர்களாக செயல்படுவர். 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான கருவிகளை உடன் எடுத்து வருவர்.  அரசு பள்ளிகள் தோறும் வரும் கருத்தாளர்கள் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளை செய்து, ஆசிரியர்கள் துணையுடன் மாணவர்களுக்கு பரிசோதனைகளை செய்து காண்பிப்பர் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசினார். முதன்மை கல்வி அலுவலர்...
தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவராக நியமனம்

திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை தமிழக அமைச்சருமான துரைமுருகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவராக அமைச்சர் துரைமுருகளின் மகனும் வேலூர் திமுக பாராளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

பொது மக்களை ஏமாற்றும் போலி மாந்தீரிக வாதிகளை கைது செய்க – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்

பொது மக்களை ஏமாற்றும் போலி மாந்தீரிக வாதிகளை கைது செய்ய மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் கடந்த கொஞ்ச நாட்களாக சமூக வளை தளங்களில் பில்லி சுனியம் - ஏவல் - தொழில் முன்னேற்றம் - செய்வீனை - கடன் தொல்லை - குடும்ப பிரச்சனைகள் - இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என மாந்தீரகவாதிகள் யூடீப் சேனல்களில் பேட்டி அளித்து வருகின்றனர். மேலும் யூடீப் சேனல்களின் தொகுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விளக்கம் அளிக்க முடியாமல் முன்னுக்கும் பின் முரனாக மாந்தீரக வாதிகள் பதில் சொல்லி வருது நம்பதக்கத அல்ல .. ஆகவே போலி மாந்தீரக வாதிகளின் பேச்சை நம்பி நேரத்தையும் பொருளாதாரத்தையும் மூளை...
தமிழகம்

திருமங்கலம் அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் தகர்ப்பு – ஆக்கிரமிப்பின் போது பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீரப்பட்டி கிராமத்தில் , அரசு நிலத்தை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாகி , சட்ட விரோதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் , அக்கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் என்பவர் , அரசு இடத்தில் கட்டிடங்களை ஆக்கிரமித்து பொதுப் பாதைக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி , நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த வழக்கின் தீர்ப்பில் , மதுரை நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற திருமங்கலம் வட்டாட்சியர் சிவராம் என்பவருக்கு உத்தரவிட்டதன் பேரில்,  இன்று (28-11-2022 ) வீரப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் , வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் தகர்த்தனர். இதனிடையே ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவரான பெண் , தனது வீட்டினுள் மண்ணெ ண்ணெய் - யை உடலில்...
தமிழகம்

விபத்தில் சிக்கிய மாநகராட்சி குப்பை லாரி பிரேக் பிடிக்காததால் முன்னாள் சென்ற கார் மீது மோதி விபத்து நல்வாய்ப்பாக காயமின்றி தப்பிய ஓட்டுநர் மேலும் மற்றொரு மாநகராட்சி குப்பை வாகனத்தில் முன் பகுதியில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை அமையும் வைத்து செல்லும் அவலம்

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன இதில் அள்ளப்படும் குப்பைகள் மாநகராட்சி தொட்டிகள் மூலமாக சேமிக்கப்பட்டு குப்பை டப்பா கலை இரண்டு இரண்டாக லாரிகள் மூலமாக மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளைக்கல் பகுதிக்கு கொண்டு செல்வது வழக்கம் இதேபோன்று இன்று மதுரை காளவாசல் பகுதியில் இருந்து பைபாஸ் சாலை போடி லைன் மேம்பாலம் அருகே வரும்பொழுது போக்குவரத்து காவலர் போக்குவரத்து சரி செய்து கொண்டிருந்தார் அப்பொழுது பாலத்தில் ஏறும் வழியில் கார் சுமார் இரண்டு நிமிடங்களுக்கும் முன்பே நின்றது அப்பொழுது அதிவேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி ஒன்று முன்னாள் நின்று கொண்டு இருந்த லாரியில் மீது பிரேக் பிடிக்காத காரணத்தால் மோதி நின்றது. இதில் நல்வாய்ப்பாக கார் ஓட்டுநர் பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தி இருந்ததால் கார் பின்பகுதி மட்டும் சேதமடைந்தது உடனடியாக வாகனத்தை...
தமிழகம்

சோழவந்தான் அருகே சாலை பணியினை தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர்.காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு சிவநாதபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி வழியாக செல்லும் சாலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திடீரென்று நேற்று இரவு மர்ம நபர்கள் 50 பேர் கொண்ட கும்பல் காலை பணிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தள்ளியதாகவும் ஏற்கனவே போடப்பட்டிருந்த சாலையை, பெயர்த்து எடுத்ததாகவும் கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சோழவந்தான் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலையை சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சோழவந்தான் காவல் ஆய்வாளரிடம் முறையிட்டனர் இதனை கேட்ட ஆய்வாளர் முறையாக புகார் அளிக்காமல் இவ்வாறு கிராமத்தினர் வந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகையால் உடனே புகார் கடிதம் எழுதி கொடுத்து விட்டு செல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று அறுவர்த்தியதன் பேரில் கிராமத்தின்...
தமிழகம்

சோழவந்தான் ஐயப்பன் கோவில்ஆராட்டு விழாவையொட்டி அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஐயப்ப பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம்1ம் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். தொடர்ந்து தினந்தோறும் மாலை ஐயப்பன் கோவிலில் பஜனை பாடல்களை பாடி தங்களது வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆராட்டு விழாவில் வட்ட பிள்ளையார் கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் ஐயப்பன் நீராடி சிறப்பு அலங்காரத்தில் கஜமுக வாகனத்துடன் ரயில்வே பீடர் ரோடு, மார்க்கெட் ரோடு, வழியாக செண்டை மேளம் அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக வந்து திருக்கோவிலிலை அடைந்து ஆராட்டு விழா நடைபெற்றது. ஐயப்பன் கோவில் ஆராட்டு விழாவில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் திரவியம் ராமசாமி மற்றும் சோழவந்தான் பேரூர் கழகம் வாடிப்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம்,...
தமிழகம்

வேலூர் மாவட்ட திமுக உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக இளைஞர் அணிசெயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் முன்னிட்டு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏ துவக்கிவைத்தார். அருகில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் உள்ளனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
1 424 425 426 427 428 563
Page 426 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!