தமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் உலக கழிப்பறை தின விழா

47views
உலக கழிவறை தினத்தினை முன்னிட்டு சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் ஆர் சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு கழிவறை பயன்படுத்துவதன் அவசியம் திறந்தவெளியில் மலம் கழித்தலால் ஏற்படும் தீமைகள் ஆகியவற்றினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது மேலும் கழிவறைகளை சிறப்பாக பராமரித்த பணியாளருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் அவர்களால் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அனைத்து கழிவறையிலும் கழிவறையின் பராமரிப்பு குறித்து QR CODE வாயிலாக கருத்துக்கள் தெரிவிக்கும் வகையில் அனைத்து சமுதாய கழிப்பிடம் மற்றும் பொதுக்கலிப்பிடங்களில் QR CODE பொருத்திய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது இந்த நிகழ்ச்சிகள் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் செயல் அலுவலர் சுதர்சன் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!