தமிழகம்

தமிழகம்

ஜல்லிக்கட்டு காளைக்கு, ஜாதி வண்ணம் பூச வேண்டாம் – அனைத்து விவசாயிகள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் நடைபெறுவது வழக்கம். இன்று அவனியாபுரம் கிராம மக்கள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பல ஆண்டுகளாக தென்கால் விவசாய பாசன சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது. தற்போது ஜாதி ரீதியாக அமைப்பை உருவாக்கி ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த முயற்சி செய்து ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், வருகின்ற 2023 ஜல்லிக்கட்டு போட்டியை ஜாதி ரீதியாக தனி அமைப்பினர் நடத்துவதற்கு அனுமதி வழங்க கூடாது எனவும்,அவனியாபுரம் பகுதி விவசாயிகள் காளை வளர்ப்போர் மாடுபிடி வீரர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என, அவனியாபுரம் பகுதி விவசாயிகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம்...
தமிழகம்

சிவகாசியில், வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்ற காய்கறி வியாபாரி… போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது கிழே விழுந்து காயம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கரத்தினம் (43). இவர் சிவகாசி பகுதியில் தலைச்சுமையாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.  வழக்கம் போல சிவகாசி, பழனியாண்டவர்புரம் காலனி பகுதியில் காய்கறி விற்பனை செய்து கொண்டிருந்த அவர், அந்தப்பகுதியைச் சேர்ந்த வசந்தாதேவி (73) என்ற மூதாட்டிக்கு காய்கறிகள் விற்பனை செய்தார். வாங்கிய காய்கறிகளுக்கு பணம் கொடுப்பதற்காக, வசந்தாதேவி பணத்தை எடுத்து வருவதற்காக வீட்டிற்குள் சென்றார். அவர் தனியாக இருப்பதை அறிந்த தங்கரத்தினம், குபீரென்று வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முயன்றார். இதனால் பயந்துபோன வசந்தாதேவி பயங்கரமாக கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட தங்கரத்தினத்தை மடக்கிப்பிடித்தனர். இது குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்....
தமிழகம்

மதுரையில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது – 17ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகள் பறிமுதல்

மதுரையில் கஞ்சா என்னும் போதை பொருளுக்கு பதிலாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. இதனையடுத்து மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவுப்படி தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் தலைமையில் போதை மாத்திரை விற்பனை கும்பலை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.  தனிப்படை காவல்துறையினர் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர். அதன்படி இன்று மதுரை வைகை வடகரை பகுதியில் மதிச்சியம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களை சோதனை செய்ய நிறுத்தினர். அப்போது பைக்கில் வந்த இரு இளைஞர்கள் தப்பியோடிய மடக்கி பிடித்து விசாரணை செய்த போது, மதுரை மாவட்டம், வடகாடுபட்டி கிராமத்தை சேர்ந்த தமிழழகன் (19) என்பதும், தமிழழகனின் நண்பர்களான...
தமிழகம்

செங்கோட்டை அரசு நூலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வு (NMMS) இலவச பயிற்சி வகுப்பு; மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

செங்கோட்டை அரசு நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். தலைசிறந்த கல்வியாளர்களால் நடத்தப்படும் சிறப்பு பயிற்சிகள் மற்றும் கல்வி சார்ந்த பணிகள் அனைத்தையும் நல்நூலகர் இராமசாமி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதி அரசு பொது நூலகத்தில் தேசிய திறனாய்வு (NMMS) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு டிச.26 திங்கட்கிழமை துவங்கியது. இதன் தொடக்க விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சுடலை கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். ஜே.பி கல்வியியல் கல்லூரி மாணவிகள் பயிற்சி வகுப்பை நடத்தினர். எல்.என். சேரிட்ரபிள் டிரஸ்ட் இயக்குனர் நீலகண்டன், ஆகாஷ் அகாடமி இயக்குனர் மாரியப்பன், ஆசிரியர் சித்தாய், ஜே.பி கல்லூரி முதல்வர் ஜான்...
தமிழகம்

பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளருக்கு புத்தாண்டு வாழ்த்து

இன்று (26.12.2022) தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஆன்ஸ் ஜெ.ஸி. மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர் சிஸ்டர்ஜெயாமேரி, சிஸ்டர்அபிதா, ஹம்சத், ஜெயந்தி பஷீர் ஆகியோர் பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கீதாவிற்கு கிறிஸ்மஸ் மற்றும்புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி கேக் வழங்கினர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 98வது அமைப்பு தினம் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் நல்லகண்ணு பிறந்தநாள்

இன்று (26.12.2022) தேனி மாவட்டபெரியகுளத்தில்பழையபேருந்து நிலையம்அண்ணா சிலைஅருகில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 98வது அமைப்பு தினம் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் நல்லகண்ணு பிறந்தநாள் பொதுமக்களுக்குஇனிப்பு வழங்கிகொண்டாடபட்டது. இதில் பெரியகுளம் ரமேஷ் தலைமையில் அனைவரும் கலந்து கொண்டனர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

தேனி மாவட்டஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு

இன்று ( 26.12.20.22 ) தேனி மாவட்டஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில்  தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட 2வது வார்டுகவுன்சிலர் மு.தேவராஜ்.தலைமையில் நவ்ஷாத், பால முருகன்,அரவிந்த்.முருகவேல் ஆகியோர் தேனி மாவட்டஆட்சியரிடம் நேரடியாக மனு வழங்கினர்.   குடிநீர்வசதி ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், பொதுமக்களின்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

108 மருத்துவ பணியாளரை ஓடும் ஆம்புலன்சில் கத்திரிக்கோலால் குத்திய நபரால் மேலூரில் பரபரப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த பதினெட்டாங்குடி பகுதியில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த இருவரை , மேலூர் 108 ஆம்புலன்ஸ் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு ஏற்றி வந்த போது , கருத்தபுளியம்பட்டி பேருந்து நிலையம் அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்த போது விபத்தில் காயம் அடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் விமல் என்பவரை மது போதையில் இருந்த நபர் கத்திரிக்கோலால் உடலில் 5 க்கு மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த 108 ஊழியரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனைத்து செல்லப்பட்டுள்ளார். தகவல் அறிந்த மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 மருத்துவ ஊழியரை கத்திரிக்கோலால் குத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்தியாளர்...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அதிவேகமாகச் சென்ற விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் சாலையோர கடைக்குள் புகுந்ததால் சூடான எண்ணெய் தெரித்ததில் வடை கடை உரிமையாளர் சாலையில் நடந்து சென்ற காவலாளி மற்றும் வாகன ஓட்டி படுகாயம் காயம்

மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அழகப்பன் நகர் அருகே சரவணா ஸ்டோர் என்னும் மிகப்பெரிய அங்காடி செயல்பட்டு வருகிறது இந்த பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் என்பது இருந்து வருகிறது இதனால் தடுப்புச் சுவர்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.   இருப்பினும் கூட பைக்கின் மீது தீராத காதல் கொண்ட இளைஞர்கள் அதிவேகமாக மதுரை மாநகரை சுற்றி வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணமாக வாகனத்தை இயக்குகிறார்கள். இந்த நிலையில் இன்று இரவு மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து அழகப்பன் நோக்கி வந்த விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து வாகனங்களில் மோதி சாலை ஓரமாக நடைபெற்று வரும் வடை கடைக்குள் புகுந்து விட்டது.  வடை கடையில் எண்ணெய் சூடாக இருந்ததால் எண்ணெய் தெரித்ததில் வடைகடையின் உரிமையாளர் சாலையில் சென்று கொண்டிருந்த காவலாளி மற்றும் இரண்டு...
தமிழகம்

உசிலம்பட்டியில் 96 திரைப்படப் பாணியில், 96ஆம் ஆண்டு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1996ஆம் ஆண்டு வணிகவியல் பாடப்பிரிவில் பயின்ற 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் இன்று 26 ஆண்டுகளுக்கு பின்பு அதே பள்ளியில் ஒன்றிணைந்து சந்தித்து கொண்டனர்., 96 திரைப்பட பாணியில் வாட்ஸ் ஆப் குழு மூலம் 96 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ மாணவிகளை ஒருங்கிணைந்த அவர்களுடன் பயின்ற நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்வை ஏற்படுத்தினர்., 26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்துக் கொண்ட மாணவ மாணவிகள் பழைய நினைவுகள் பகிர்ந்து கொண்டனர்., தொடர்ந்து தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரிய ஆசிரியைகளை அழைத்து வந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து காலில் விழுந்து ஆசி பெற்றனர். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என உறுதி ஏற்றுக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். செய்தியாளர் : உசிலை...
1 361 362 363 364 365 563
Page 363 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!