தமிழகம்

காட்பாடியில் முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகனின் பேத்தி நிச்சயதார்த்த விழாவில் கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து குத்தாட்டம் போட்ட திமுக ஒன்றிய சேர்மன் வேல்முருகன்

35views
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் பேத்தியும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மகளுக்கும், சினிமா தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் காட்பாடியில்உள்ள கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் கடந்த ஞாயிறு மாலை திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் திமுக எம்.பி.கனிமொழி மற்றும் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விழாவில் மகிழ்ச்சி பொங்க சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டனர். இதில் கதிர் ஆனந்த் தனது ஆதரவாளர்களுடன் குத்தாட்டம் போட்டார். இவருடன் காட்பாடி ஒன்றிய திமுக சேர்மன் வேல்முருகன், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் சினிமா பாடலுக்கு நடனம் (குத்தாட்டம்) போட்டனர். இந்த ஆட்டம் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஆட்சியில் இல்லாதபோதே இந்த ஆட்டமா? ஆட்சியில் திமுகவினர் இருந்து இருந்தால் என்ன? ஆட்டம் ஆடி இருப்பார்கள்?…என கமெண்ட் அடித்து வருகின்றனர், காட்பாடியை சேர்ந்த எதிர்கட்சியினர்.
இதில் குறிப்பாக காட்பாடி ஒன்றிய சேர்மன் வேல்முருகன், கிலோ கணக்கில் நகையை அணிந்து கொண்டு குத்தாட்டம் போடுவது வைரலாகி வருகிறது.வேல்முருகன் காட்பாடி அடுத்தவள்ளிமலையை சேர்ந்தவர், பெங்களூரில் பெரிய, பெரிய லாரிகளை வைத்துள்ளார்.
பிரபல ரவுடி மதுரையை சேர்ந்த வரிச்சூர் செல்வம் மற்றும் அரசியல் பிரமுகர் ஹரி நாடாருக்கு, டப் கொடுத்து கிலோ கணக்கில் நகை அணிந்து திருமணம், திருவிழாவிற்கு சென்று வருபவர் இந்த வேல்முருகன் என்று கிண்டல் செய்கின்றனர் காட்பாடி பகுதி மக்கள்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!