ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற அரிதான ஆட்டோ இம்மியூன் (Auto Immune) நோய்க்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கும் முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெறும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை
2016-ம் ஆண்டில் முதலில் வரையறை செய்யப்பட்ட GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற Auto Immune நோய், உடல் மற்றும் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிவிரைவான மாற்றங்களை விளைவிக்கக்கூடும் மூளை மற்றும் முதுகுத்தண்டில் பல்வேறு தொற்று / அழற்சி நிலைகளைப் போலவே இந்நோயின் அறிகுறிகளும் தோன்றக்கூடும் என்பதால் இதை சரியாக அடையாளம் கண்டு உறுதி செய்வது சவாலாகும். தென்தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு மருத்துவமனை என புகழ் பெற்றிருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மூளை மற்றும் முதுகுத்தண்டின் இயக்கங்களை பாதிக்கின்ற அரிதான மற்றும் சமீபத்தில் வரையறை செய்யப்பட்டிருக்கும் ஒரு Auto Immune நோயான ஆட்டோ இம்யூன் GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி கண்டறியப்பட்ட 31 வயதான ஒரு பெண்மணிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. இந்தியாவில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இன்டராவீனஸ் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் சீராய்டு மருந்துகளை கொண்டு...
