அறிவிப்புஇலக்கியம்

மு.முருகேஷ் எழுதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஜப்பானிய மொழியில்…

1.32Kviews
ஜப்பானிய மூன்று வரி கவிதையான ஹைக்கூ கவிதைகளை
தமிழுக்கு முதன்முதலாக மகாகவி பாரதி, தனது
கட்டுரையொன்றின் வழியே 1916-இல் அறிமுகம் செய்து வைத்தார்.
1984-ஆம் ஆண்டிலிருந்து தமிழில் நேரடியான ஹைக்கூ கவிதை நூல்கள் வெளிவரத் தொடங்கின.
தமிழில் ஹைக்கூ நூல்கள் வெளிவரத் தொடங்கிய காலந்தொட்டு, தமிழ் ஹைக்கூ கவிதைத் தளத்தில் 37
ஆண்டுகாலமாகத் தீவிரமாக இயங்கி வருபவர் மு.முருகேஷ்.

இதுவரை 11 ஹைக்கூ நூல்களை வெளியிட்டுள்ள இவரது ஹைக்கூ கவிதை நூல் ஒவ்வொன்றும்
புதுமையான வடிவத்தில் வெளியாகின. கையளவு வடிவத்தில் ‘விரல் நுனியில் வானம்’ (1992),
‘ஹைக்கூ டைரி’ (2000), ‘உயிர்க் கவிதைகள்’ (2006), 2019-இல் உள்ளங்கையளவு தமிழின்
மிகச் சிறிய நூலான ‘குக்கூவென…’, தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் ‘மலர்க
ஹைக்கூ’ (2021) என வெளிவந்துள்ளன.

இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலத்தில் இவரது ஹைக்கூ கவிதைகள் மொழியாக்கம்
செய்யப்பட்டுள்ளன. 2008-ஆம் ஆண்டு பெங்களூரூவில் நடைபெற்ற பன்னாட்டு ஹைக்கூ
கவிஞர்கள் பங்கேற்ற உலக ஹைக்கூ கிளப் மாநாட்டில், தமிழில் ஹைக்கூ கவிதை எழுதும்
கவிஞர்கள் சார்பில் பங்கேற்றார். அதில் நடைபெற்ற ஹைக்கூ கவிதைப் போட்டியில் இவர்
எழுதிய ஹைக்கூ ஒன்றும் பரிசினைப் பெற்று, உலக மொழிகளிலெல்லாம் மொழியாக்கம்
செய்யப்பட்டன.
தமிழில் ஹைக்கூ கவிதைப் பரவலாக சென்றடைய ‘இனிய ஹைக்கூ’ எனும் கவிதை இதழினை
நடத்தியதோடு, தமிழகமெங்கும் ஹைக்கூ கவிதைத் திருவிழாக்களை நடத்தி, பலரையும் எழுதத்
தூண்டியவர். தமிழில் வெளியான முதல் நூல் தொடங்கி, இன்றுவரை வெளியான 500-க்கும் மேற்பட்ட
ஹைக்கூ நூல்களை ஆவணமாகத் தொகுத்து வருகிறார்.
ஜப்பானிய மண்ணில் உருவாகி, இன்றைக்கு உலகின் திசையெல்லாம் வலம்வருகின்றன
ஹைக்கூ கவிதைகள். தமிழில் மு.முருகேஷ் எழுதிய 10 ஹைக்கூ கவிதைகள், தற்போது
ஜப்பானிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அகிதா இண்டர்நேஷனல் ஹைக்கூ
நெட்வொர்க் (Akita International Haiku Network)-கில் வெளியாகியுள்ளது. இந்த நெட்வொர்க்கின்
நிறுவனர் ஜப்பானைச் சேர்ந்த கவிஞர் ஹிடெனோரி ஹிருடா.

கவிஞர் ஹிருடா, அகிதா இண்டர்நேஷனல் ஹைக்கூ நெட்வொர்க் வலைத்தளத்தின்
பொறுப்பாளராக இருந்து, உலக மொழிகளில் எழுதப்படும் சிறந்த ஹைக்கூ
கவிதைகளை ஆங்கிலம் வழி படித்து, அதனை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து,
’வோல்டு ஹைக்கூ சீரியஸ்’ (World Haiku Series) எனும் தொடராக வெளியிட்டு வருகிறார்.
அதில், 73-ஆவது கவிஞராக மு.முருகேஷின் கவிதைகளைத் தேர்வுசெய்து ஜப்பானிய
மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவர், ஜப்பானிய ஹைக்கூ குழுவின் உறுப்பினர்
மற்றும் சர்வதேச ஹைக்கூ திட்டத்தின் அமைப்பாளர் (2019)என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் மேற்கண்ட பக்கத்திற்கான இணைப்புகள்:

https://akitahaiku.com/2021/07/31/
https://www.facebook.com/shhiruta

ஜப்பானிய மொழியாக்கம் செய்யப்பட்ட
ஹைக்கூ கவிதைகள் :
0
மழை நீரால் நிரம்பும் ஏரி
நிற்கவேயில்லை
தவளைச் சத்தம்
Lake filled with
rain water
frog’s noise doesn’t stop
いっぱいの湖
雨水で
カエルの鳴き声が止まらない
0
இலைநுனியில்
ஒற்றை நீர்த்துளி
நாக்கை நீட்டும் ஓணான்
Single droplet
at the tip of the leaf
Lizard sticking out its tongue
一滴
葉の先に
舌を突き出しているトカゲ
0
நெஞ்சைப் பதற வைக்கிறது
நெடுஞ்சாலைப் பயணம்
மழையிரவு நத்தைகள்
Heart breaking
highway travel
snails in the rainy night
心が痛む
高速道路の旅行
雨の夜のカタツムリ
0
எரியும் தீபத்தை
ஊதி அணைத்தேன்
உதட்டில் ஒளியின் வெப்பம்
Turned off the light
blowing by mouth
heat of the light on the lips
明かりを消した
口から吹く
唇の光の熱を
0
குழந்தைகளின் கூச்சல்
குடித்துவிட்டு வீடு வந்த அப்பா
திண்ணையில் மெளனமாய்
Noisy cries of children
drunken dad enters the yard
silence spread suddenly
子供たちの騒々しい叫び
酔った父さんが庭に入る
沈黙が突然広がる
0
துருப்பிடித்த ஆணி
காற்றிலாடும் அம்மாவின் படம்
மிச்சமிருக்கும் ஊதுபத்தி மணம்
Mum’s photo on the rusty nail
swings in the blowing wind
Smell of incense stick remains
さびた釘のママの写真
吹く風に揺れる
線香の匂いが残る
0
மீன் சந்தையில் கூட்டம்
கேட்டதுமே குத்துகிறது
முள்ளாய் விலை
Huge crowd in the fish market
Knowing the price
pricks as a thorn
魚市場の大群衆
価格を知り
とげとして刺す
0
அறுந்துபோனது
குழந்தையோடு சேர்த்து
அம்மாவின் இடுப்பில் செருப்பு
Worn out sandals
along with the baby
both sits on the mom’s waist
使い古したサンダル
赤ちゃんと一緒に
両方とも母さんの腰に座っている
0
கூரைக் கிழிசல்களைக்
குத்திக் காட்டுகின்றன
மழை ஊசிகள்
Rain strings
notify the
tears in the roof
雨の一続き
知らせる
屋根の涙を
0
உலர்ந்த உதடுகளைச்
சட்டென ஈரமாக்கிப் போனது
குழந்தையின் முத்தம்
Baby’s kiss
suddenly moistened
the dried lips
赤ちゃんのキス
突然湿らせた
乾燥した唇を
  • தமிழ் : மு.முருகேஷ்
    ஆங்கில மொழியாக்கம் : ஷன்மூன்
    ― Translated into Japanese by Hidenori Hiruta

Right Click & View Source is disabled.

error: Content is protected !!