இலக்கியம்

இலக்கியம்

கட்டுரை

சிலப்பதிகாரம் கொடுங்கல்லூர் பகவதி கோவில்

மூலவரான பத்திரகாளி "கொடுங்கல்லூரம்மை" என்றழைக்கப்படுவதுடன் கண்ணகிக்கான திருகோவில். மதுரையை எரித்தபின், சேர நாட்டுக்கு வந்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டிருக்கிறாள். பண்டைய சேரநாட்டுத் தலைநகரான மகோதையபுரத்தின் தொடர்ச்சியான கொடுங்கல்லூர் அரச குடும்பத்தாரின் குலதெய்வமும் இவளே. காவுதீண்டல்" எனும் சடங்கு, அனைத்துக் குலத்தாரும் ஆலயத்துக்க்குள் அனுமதிக்கப்பட்டதை நினைவுகூரும் சடங்காக அமைகின்றது. இக்கோவிலின் மூலக்கோவில் என்று கருதப்படும் ஆதி குரும்பா பகவதி கோவில், கொடுங்கல்லூர் நகரின் தென்புறம் அமைந்திருக்கின்றது. குடும்பி குலத்து மக்கள்,...
கவிதை

மாதர் போற்றுவோம்

அவள் அஹிம்சையின் ஒரு பெயர் அக்கினிக்கு மறுபெயர் பூ போலும் சிரிப்பாள் பூகம்பமாகவும் வெடிப்பாள்... வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் அவள் தான் நல்ல நம்பிக்கை ... நமக்கு முன்னிருந்தோ பின்னிருந்தோ நம்மை இயக்கும் ஒரு பெருங்கை... அவள் எடுக்கும் அவதாரங்கள் அநேகம்... அத்தனையும் காட்டுவது பாசம் மிக்க குடும்பத்தின் சினேகம்.... ஒரு முகம் காட்டும் பன்முகம் ... விளக்குத் திரி போல் அனைவருக்கும் நன்முகம்... தனக்கு மட்டுமின்றி கணவனுக்கும் குடும்பத்துக்கும்...
இலக்கியம்

‘மகாகவிதை’க்கு ரூ 18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய 'மகாகவிதை' நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது' மற்றும் 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) மலேசியாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கின....
இலக்கியம்

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூல் ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப்பேராயமும் இணைந்து இவ்விருதை வழங்குகின்றன. முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் மகா கவிதை. ஜனவரி 1ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார். உலகமெங்கும் பரபரப்பாக இந்நூல் பேசப்பட்டு வருகிறது. நிலம் - நீர் - தீ...
இலக்கியம்

எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘நீரதிகாரம்’ நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

எழுத்தாளர் அ.வெண்ணிலா ‘ஆனந்த விகடன்' வார இதழில் 122 வாரங்கள் தொடராக எழுதி, வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நாவல் ‘நீரதிகாரம்’. இரு பெரும் தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த நாவலைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நேற்று (2024 - ஜனவரி 18) வெளியிட்டார். நூலின் முதல் பிரதியைப் பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் பெற்றுக்கொண்டார். உடன் தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, எழுத்தாளர் இமையம், கவிஞர் மு.முருகேஷ்,...
கட்டுரை

“நாங்க வேற மாதிரி…”

யூனிகேர்ல்ஸ் - இன்றைய யுவதிகள் கொஞ்சம் வித்தியாசமாகவே யோசிக்கின்றனர். ஐ டி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம், வாரஓய்வு நாட்களில் ரிசார்ட், வெளியே அவுட்டிங் செல்வது, சமூக வலைத்தளங்களில் அரட்டை, இன்ஸ்ட்டா, எக்ஸ் -ல் உடனடியாக பதிவேற்றும் புகைப்பட களேபரங்கள், ஸ்டேட்டஸ் என்ற பெயரில் நடக்கும் பயமுறுத்தல்கள் இப்படியான இன்றைய வெகு ஜன வட்டத்தை விட்டு வெளியே வந்திருக்கும் இவர்கள் கடந்த ஆண்டு தான் கல்லூரி முடித்து சுடச்சுட இந்த...
கவிதை

கலைஞர் எனும் விடியல் …

இன்றைய விடியல் அரசுக்கு அவர்தான் ஒளிக்கதிர்... உழைத்து முடித்தவர்க்கும் புதிய உற்சாகம் ... குடிசைகளைக் கோட்டையை நோக்கித் திருப்பிய குதூகலம் ... மிடிமைப்பட்டவர்க்கான மீட்சி அரசியல்... பெயர் தெரியாத ஒரு பழங்கிராமத்தின் ஒற்றைப்புள்ளிதான்... ஆனால் இந்திய அரசியல் வரைபடத்தில் அவர்தான் அதிகக் கோலங்களை வரைந்தார்.. சமக்கிருதம் கலந்த அன்றைய தமிழுக்கு அவர்தான் சத்துணவு தந்தார்...அதை நாடகமாகவும் திரைக்கதை வசனங்களாகவும் ஊட்டியும் தீட்டியும் உயிர்பெற வைத்தார்... பெரியார் அண்ணாவுக்குச் சீடர்தான்...எனினும் இருவரையும்...
கட்டுரை

பழந்தமிழர் இலக்கியங்களில் கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை தீபம் (Karthigai Deepam) என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். பழந்தமிழரின் பெருவிழாவாக இந்த கார்த்திகை விளக்கீடு திகழ்ந்தது என்பதனை நீங்கள் அறிவீர்களா?? கிபி 10ஆம் நூற்றாண்டில், சோழர்கள் சூரிய ஆண்டுமுறை அறிமுகப்படுத்தாத வரை பொங்கல் விழா கிடையாது. அதற்குமுன் தைப்பூசம் மட்டுமே.......
கவிதை

“கைக்கூலிகளுக்கு மத்தியில் இவன் ஒரு மேய்வேலி’ : திப்பு சுல்தான்

தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில் சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்... துப்பு கெட்டவர்கள் மத்தியில் தேசத்தை உயிருக்கு மேலாக ஒப்பிட்டவன் இவன்... திப்பு - மனிதர்களில் ஒரு புனிதன்.. மன்னர்களில் ஒரு மாமணி.... வீரத்தால் சிறந்தவன் - நெஞ்சின் ஈரத்தால் நிறைந்தவன்... அடுத்தவர்க்கு உதவும் - உப காரத்தால் இனித்தவன் - எதிரிகளை மேல் கொண்ட காரத்தால் தனித்தவன்.... தேசத்தை நேசிப்போர்க்கு திப்புவின் வீரம் பிடிக்கும்... பிடிக்காதவர்க்குத்தான் உள்ளமெல்லாம் அரிக்கும்.......
இலக்கியம்

மொழிபெயர்ப்புக்கு முதன்முதலாக விருதுகளை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள் புகழாரம்

சென்னையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதியன்று எழுத்தாளரும் புரவலருமான நல்லி குப்புசாமியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் ‘திசை எட்டும்’ மொழியாக்க விருதுகள் வழங்கும் விழாவும் ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை ந.அருள் தலைமையேற்றதோடு, நூல்களை வெளியிட்டும், மொழியாக்க விருதுகளை வழங்கியும் தலைமையுரையாற்றினார். அவர் பேசியதாவது: “நாடறிந்த பெருந்தகையும், நல்லவர் நெஞ்சிலெல்லாம் புகழ் மணக்க வாழும்...
1 2 3 38
Page 1 of 38

Right Click & View Source is disabled.

error: Content is protected !!