உலகம்உலகம்

துபாயில் அமீரக குறுநாடக விழா 29ஆம் தேதி தொடங்குகிறது

194views
மீரகத்தில் நாடக நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு நாடக போட்டிகளை துபாயில் உள்ள ரமா மலர் குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.  அந்த வகையில் இவ்வாண்டு 2022 ம்ஆண்டுக்கான குறுநாடக திருவிழா நடைபெற உள்ளது.
துபாய் ஊத் மேத்தா பகுதியில் உள்ள ஜபில் லேடீஸ் கிளப்பின் ‘ஜபில் தியேட்டரி’ல் இம்மாதம் (அக்டோபர்)29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் குறு நாடக விழா நடைபெறுகிறது.  இதில் துபாய், அபுதாபி, ஷார்ஜா, புஜைரா உள்ளிட்ட பல்வேறு அமீரகங்களில் இருந்து165 கலைஞர்கள் அடங்கிய 17 நாடக குழுக்கள் பங்கேற்கின்றன.

அவை :
1) எனையேன் மறந்தேன்
2)தந்தை சொல் மிக்க
3)நினைப்பதெல்லாம்
4)விஆர்
5)நிமிர்ந்து நில் துணிந்து சொல்
6)ரீலா ரியலா
7)ஷார்ட்ஸ்
8)விவசாயி
9)நெகிழி
10)999 1
11)ஏவிஎம் கனல்
12)புது வெள்ளம்
13)ஒரு வாசல் மூடி
14)லட்சியம்
15)சொல்லத்தான் நினைக்கிறேன்
16)குரல்
17)நிழல் அல்ல நிஜம்.
மேற்காணும் இந்தப் பட்டியலில் குழந்தைகளே உருவாக்கியுள்ள நாடகமும், பெண்களே எழுதி இயக்கி நடிக்கும் நாடகமும் அடக்கம் என்பது சிறப்பம்சம்.

இதுதவிர 30 ந்தேதி சென்னையில் இருந்து நாடக இயக்குனர் தாரிணி கோமலின் “கோமல் தியேட்டர்” வழங்கும் ‘திரௌபதி’ இசை நாடகம் நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினராக தாரிணி கோமல கலந்து கொண்டு சிறப்பான நாடகம் மற்றும் சிறந்த நடிகர்களுக்கு பரிசுகளை வழங்கவிருக்கிறார்.

நாடகக் காதலர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது.
செய்தியாளர்: வி.களத்தூர் ஷா

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!