தமிழகம்

பாலமேடு அருள்மிகு கிராம பொது மகாலிங்க சுவாமி மற்றும் ஜீவ சமாதி மடத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சாமி தரிசனம்

368views
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேடு கிராமத்தில் பழமை வாய்ந்த கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டிக்கு சொந்தமான ஸ்ரீ மகாலிங்க சுவாமி மற்றும் ஜீவசமாதிமடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது நாள்தோறும் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பாலமேடு அனைத்து சமுதாய உறவின்முறை தலைவர் மற்றும் நிர்வாகத்தினர்கள், பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதிதங்கமணி, உறுப்பினர்கள் சங்கரலிங்கம், கிருஷ்ணன், ஜெயராமன், குமரேசன், சுரேஷ், ராஜமாணிக்கம், சந்திரன், முத்துசெல்வம் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!