தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அக்சிலியம் பெண்கள் கல்லூரியில் முத்தமிழ் விழா தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் விழா கோலாகலம்.

34views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் அக்சிலியம் பெண்கள் தனியார் (தன்னாட்சி) கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முத்தமிழ்மன்றம் சார்பில் முத்தமிழ் விழா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
காலையில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்குகயிறு இழுக்கும் போட்டி, உரியடித்தல், பல்லாங்குழி, கோல் மற்றும் கும்மி ஆட்டம், மாலையில் கரக ஆட்டம் ,பரதநாட்டியம்,பஇசை மற்றும் தமிழ் பாண்டு கலைநிகழ்ச்சிகளை மாணவிகள் நடத்தினர்.பின் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் அருட்சகோதரி மேரி ஜோஸ்பின் ராணி தலைமை தாங்கினார். முதல்வர் அருட் சகோதரி ஆரோக்கியஜெயசீலி, வரவேற்றார். துணை முதல்வர் அருட்சகோதரி அமலா வளர்மதி, உதவி துணை முதல்வர் அபிபியூலா, தமிழ்துறை தலைவர் செந்தில் செல்வி, தமிழ்துறை பேராசிரியை கள், இணை, துணை பேராசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!