சினிமா

தமிழ் நாடக வார விழாவில் பார்த்த மற்றொரு நாடகம் நவபாரத் தியேட்டர்ஸின் ‘வீரா’

24views
‘வானொலி அண்ணா’ மறைந்த கூத்தபிரான் நிறுவிய நாடகக் கம்பெனியை அவரது மகன் ரத்னம், பேரன் விக்னேஷ் ரத்னம் நடத்தி வருகின்றனர்.
சினிமா டைரக்டராக சரியான வாய்ப்புகள் அமையாத வீரா, உணவு டெலிவரி பாயாக கிடைக்கும் வேலைகளை செய்து தன்னுடைய கனவான படம் இயக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பாடுபடுகிறான்.
சினிமாவில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வாய்ப்புக்குப் போராடி, தனியாகப் படம் இயக்கவிருந்த சூழலில் தயாரிப்பாளர் மகனுடன் ஏற்பட்ட சிறு உரசலினால் வாய்ப்பை இழந்து வீரா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.
ஊட்டியில் இருக்கும் ஆசிரமத்தில் இணையும் வீரா, அங்குள்ள மாற்றுத் திறனாளி பெண்ணின் திறமையை கண்டு வியந்து, அதையே ஒரு குறும் படமாக எடுக்கிறான் அந்தப் படம் சர்வதேச அளவில் மிகுந்த பாராட்டுகளைப் பெறுகிறது.
லட்சியத்திற்காக போராட வேண்டும், வாழ்க்கை பல சவால்கள் நிறைந்தது அவற்றை எப்படி வெல்ல வேண்டும் என்பதை வீரா கதாபாத்திரத்தில் விக்னேஷ் ரத்னம் சிறப்பாக இயக்கி நடித்திருந்தார்.

வாய் பேச இயலா மாற்றுத்திறனாளி கேரக்டரில் பல்லவியின் நடிப்பு மிகவும் அருமை. தயாரிப்பாளராக இரண்டொரு காட்சியில் வரும் நண்பர் சுரேஷ் சீனுவின் நடிப்பும் மிக அருமை.
பழைய பாணியில் வண்ணம் தீட்டப்பட்ட திரைகள் இல்லை.. பின்னணியில் LED திரையில், பொருத்தமானவற்றை அழகாக ஒளிரச் செய்து காட்சிகளை சிறப்பாக இணைத்திருந்தனர்.
வலிந்து மெசேஜ் என்று எதுவும் கூறாமல் நாடகமாக்கல் பாணியிலேயே பார்வையாளர்களை உணரச் செய்திருந்த விதம் அபாரம்.
சிறிய, சிறிய வசனங்களிலும் கவனம் ஈர்த்திருந்தனர். கடந்த கோடை நாடக விழாவில் சிறந்த நாடகத்திற்கான விருதை வீரா குழுவினர் பெற்றிருந்தனர் என்பது கூடுதல் தகவல்.
சமீபத்தில் கண்ட சிறப்பான நாடகம் இந்த ‘வீரா’.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!