உலகளவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அசுரன் படத்தில் நடித்த அம்மு அபிராமி தற்போது கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர் தமிழில் விஜய்யின்...
டாடா டியாகோ காருக்கு வழங்கப்பட்டு வந்த விக்டரி மஞ்சள் நிறத்தேர்வு எந்தவொரு அறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம். சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சப்-4 மீட்டர் ஹேட்ச்பேக் காரான டியாகோவின் டைட்டானிக் நீல நிறத்திற்கு பதிலாக புதிய அரிசோனா நீல நிறத்தேர்வை வழங்கி இருந்தது. இதன் காரணமாக தீச்சுடரின் சிவப்பு, அரிசோனா நீலம், ப்யூர் சில்வர், முத்தின் வெள்ளை, விக்டரி மஞ்சள் மற்றும்...
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நோய் தொற்று பாதிப்பு அச்சம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகி மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளார். அதோடு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு கொரோனா அச்சம் காரணமாக தடை விதித்துள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் நாட்டு அரசு...
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆஸி வீரர்களை தனி விமானத்தில் நாட்டுக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது. ஐபிஎல் தொடரில் ஆஸி வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு திரும்ப பலரும் ஆசைப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் ஆஸி கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் இருக்கும் அவர்களை நாட்டுக்கு அழைத்துச் செல்ல தனி விமானம்...
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் டிடாகோ மரடோனாவுக்கு சரியான சிகிச்சை அளிக்காததே அவர் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் டியாகோ மரடோனா. அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவனான இவரை கடவுளின் கை என்றே பலரும் அழைப்பதுண்டு. உலக அளவில் கொண்டாடப்பட்ட கால்பந்து வீரரான டியாகோ மரடோனா கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அதற்கு முன்னதாக...
உலகின் மிகப்பெரிய பணக்கார ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதிகள் தற்பொழுது விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உலகின் முதல் பணக்காரர் என அறியப்பட கூடியவர் தான் பில்கேட்ஸ். இவருக்கு தற்போது 65 வயதாகிறது. உலகின் மிகப்பெரிய மதிப்புள்ள நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கிய இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னதாக 1987 ஆம் ஆண்டு...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா ஒட்டுமொத்த பாதிப்பு 2,02,82,833ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,02,82,833ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனாவிலிருந்து 1,66,13,292 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,57,229...
ஒரு தடவை நாம் சிடி ஸ்கேன் எடுப்பது 300 முதல் 400 முறை வரை மார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் கூட உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைய பல வழிகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், கொரோனா பரிசோதனை கருவிகளில் கொரோனா அறிகுறி இல்லாதாவர்கள், சிடி ஸ்கேன் எடுத்து,...