கட்டுரை

அறியப் பட வேண்டிய அரிய பெரும் வீர கலை

1.53Kviews
“வருசெருவொன் றின்மையினான் மற்போரும்
சொற்புலவோர் வாதப் போரும்
இருசிறைவா ரணப்போரும் இகன்மதவா
ரணப்போரும் இனைய கண்டே.”
என்ற கலிங்கத்துப்பரணி பாடலை தந்த செயங்கொண்டர் பாடலின் படி பண்டைய காலத்தின் கலைப்பொக்கிஷம் இந்த “மற்போர்” ஆம் ! மதம் பிடித்த இரு யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சியையும், “மற்போர் எனப்படும் மல்யுத்த சண்டையையும் பொழுது போக்காக மட்டுமின்றி வீரர்களின் யுத்தம், மற்றும் தேகப் பயிற்சியாகவும் ஒன்று படுத்தி கண்டுள்ளனர் அக்கால தமிழ் மன்னர்கள் “மதம் கொண்ட யானையையும், பலம் கொண்ட மல்லர்களையும்” ஒன்றாக காட்சிப்படுத்தியுதின் மூலம் மற்போர் கலையின் பெருமைகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அப்படிப்பட்ட புகழ் வாய்ந்த மல்லர் கம்பம் குறித்து
மல்லர் சிறப்பினை மல்லாடல் என்று சங்க இலக்கியங்கள் மூலம் நாம் அறியலாம்.  பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மன் மற்போரில் வெற்றி பெற்றார் என்பதால் அவனின் சிறப்பு பெயர் மாமல்லன் என்று அழைக்கப்பட்டது. மேலும் அவர் வாழ்ந்த மண்ணிற்கு மாமல்லபுரம் என்றும் பெயர் வைக்கப்பட்டது.
சோழர்வாழ்ந்த காலத்திலும் மல்லர்கள் பற்றி குறிப்புகள் உள்ளது. ஆமூர் மல்லனும் தித்தன் சோழனும் மற்போர் புரிந்ததாக சங்க இலக்கியத்தின் புறப்பாடல் – 80 ல் குறிப்பிட்டுள்ளது.
பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மனஸ் ஓலஸ் (சோமேஷ்வர் சாளுக்கிய மன்னன்) என்னும் புத்தகத்தில் போர் முறை பயிற்சிகளாக மக்கள் இரும்பு தூண் கொண்ட ஒன்றில் பயிற்சி புரிந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலில் பெரும்பாலும் தென்னிந்திய மன்னர்களின் வீரம் செறிந்த பயிற்சி முறைகள் முழுமையாக கூறப்பட்டுள்ளது.

தன் உடலையும் மனதையும் வலுப்படுத்தி ஒரு உயரிய பண்பு உடையவனாக போர்வீரனாக மாற்றுவதுதான் மல்லர் கம்பம் பயிற்சியின் நோக்கமாக இருந்துதது. நாளடைவில் மல்யுத்த பயிற்சியின் ஆயத்த பயிற்சியாகவும் இணைக்கப்பட்டு மல்யுத்தம் மற்போர் பழகுவோர் மல்லர் கம்பம் பிடிகள், பூட்டுகள் மற்றும் தூக்கி எறிதல் போன்ற பயிற்சியினை பழகலானர். இதன்மூலம் உடலினை உறுதி செய்யும் நோக்கத்திற்காக பயிற்சி செய்யப்பட்டது என கூறலாம்.மல்யுத்த பயிற்சியே தலையாக பயிற்சியாக கொண்ட மல்லர்கள் அவர்களின் ஆயத்த பயிற்சியினை சற்று உடலை மெருகேற்றும் பயிற்சியாக எண்ணம் கொண்டனர் தவிர இதனை முக்கிய கலையாக ஏற்காமல் சாதாரண நடைமுறை பயிற்சிகள் மேற்கொண்டு பழகி வந்தனர். ஆதலால் மற்போர் மல்யுத்தம் வளர்ந்த அளவிற்கு மல்லர் கம்பம் கலை பெயர் அறியாமல் போயிற்று. மல்லர்களின் கம்பம் என்ற சிறப்பு பெயரை கொண்டு இன்றுவரை வலம் வருகிறது.
மல்லர் கம்பம் தோற்றம்
கம்பெடுத்து தன்னை காத்து உயிர் வளர்த்த இனம் தோன்றியபோதே தோன்றியிருக்கக்கூடும் மல்லர் கம்பம் பயிற்சி முறைகள் பழம்பெரும் கலையான சிலம்ப கலக்கும் மல்லர் கம்பம் பயிற்சிக்கும் ஒரு ஒற்றுமை; சிலம்பம் சுழற்ற வீரன் நின்றால் சிலம்பம், கம்பம் நிற்க வீரன் சுழண்டால் மல்லர் கம்பம். மல்லர்களின் தோற்றம் ஆக நாம் கருதப்படுவது சிலம்பன் வாழும் குமார கோவில் சிற்பங்கள் முதல் சேர சோழ பாண்டிய மன்னர்களின் கோயில் சிற்பங்கள் மூலம் வரையறுக்கப்படுகிறது. சோழர் சிற்பக்கலையோடு மொத்த உருவமாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் மற்றும் காஞ்சிபுரம் கோயில்களில் மல்லர் கம்பம் சிற்பங்கள் அமைந்துள்ளது. மற்போர் புரியும் மலர்களின் மறைமுக பயிற்சியான மல்லர் கம்பம் வலம் வந்து உள்ளது. மேலும், மராட்டியர்களின் படையெடுப்பிற்குப் பின் மக்களையும் மற்ற வீரர்களையும் புலம்பெயர்ந்து சென்று விட்டனர் போர் வீரர்களும் புலம்பெயர்ந்து சென்று விட்டனர் சிறந்த மல்யுத்த வீரன் அங்கே உருவாக பயிற்சி கூடங்களுக்கு தலைவனாக மாற்றப்பட்டு மரியாதையும் சிறப்பாக செய்து இன்றைய அளவும் வட மாநிலங்களில் சிறப்பு பெற்று வருகிறத. இது மகிழ்வான நிகழ்வு என்றாலும் நமது மண்ணின் கலை மருவி ஆங்காங்கே சென்றுவிட தமிழையும் தமிழ் கலையையும் இன்றும் ஒரு சிலரே வாழ வைத்துக் கொண்டு உள்ளனர். தோற்றம் நாமாக இருக்க அதனை முறையாக எடுத்து வர முடியாமல் நம்மை ஒதுக்கி வைக்கின்றனர் இருந்தும் திருவிழாக்கள் மூலம் கலைகள் வாழ்ந்த வண்ணம் இருக்கிறது.
மல்லர் கம்பம் சிற்பங்கள் கண்டெடுக்கப் பட்ட இடங்கள்
குமரன் கோவில்
கங்கைகொண்ட சோழபுரம்
தஞ்சை பெரிய கோவில்
தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் –
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில்.
சேர, சோழ ,பாண்டிய மன்னர்களால் போர் முறை மற்றும் மற்றும் ரகசிய பயிற்சியாக பயன்படுத்தப்பட்டு இன்று பெரும் கலையாக வளர்ந்துள்ளது நமது மல்லர் கம்பம்.
இலக்கியங்களில் மல்லர் கம்பம்.
வீரத்தின் கண்ணாடியான மரபு விளையாட்டுக்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மற்போர் விளையாட்டில் வெற்றி பெற்ற வீரனுக்கு “மல்லன்” என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
மல்லன்- என்ற சொல்லுக்கு பலம், வீரம் என்று பொருள் சொல்கின்றனர் மாமுனிவர்கள். மாமல்லன் மாமல்லபுரம் போன்ற பெயர்களால் மல்லன் என்ற சொல் வடிவம் பெற்றவையாக நமக்கு தெரிகிறது. இயற்கையோடு ஒன்றிய ஒரு செயல்பாடாக குரங்கின் தாவுதல், பிடித்தல் முறைகளில் செய்யப்படுகிறது. சிலப்பதிகாரம், தொல்காப்பியம், புறநானூறு ஆகிய இலக்கண இலக்கியங்களில் மல்லர் என்ற பெயர் கொண்டு வீரத்தினை வெளிப்படுத்துகின்றது.

ஒரு மல்லன் பத்து யானைகளுக்கு சமம் என்று கூறுவர், அந்த சிறப்பு வாய்ந்த மல்லன் என்ற சொல் தமிழகத்தின் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
சோழர்வாழ்ந்த காலத்திலும் மல்லர்கள் பற்றி குறிப்புகள் உள்ளது. ஆமூர் மல்லனும் தித்தன் சோழனும் மற்போர் புரிந்ததாக சங்க இலக்கியத்தின் புறப்பாடல் – 80 ல் குறிப்பிட்டுள்ளது
இதன் மூலம் மல்லன் என்ற வார்த்தை தமிழுக்கே உரித்தான ஒன்றாக அறியப்படுகிறது. சங்க இலக்கியங்களில் மல்லன் யானைகளோடு ஒப்பிட்டுக் கூறுகின்றனர் யானைப்படையும், யானை போன்ற வலிமையுடைய வீரர்களும் தன் தாய்நாட்டையும் தமிழ் மொழியும் பாதுகாத்ததாலே இன்றும் தமிழ் உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

“ மைந்துடை மல்லன் மதவலி முருக்கி”-புறநானூறு
இதில் மல்லன் என்பவன் யானை போன்ற வலி வலிமை உடையவன் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
“கவிகை மல்லன் கைப்பட்டோரே”
என்ற வரிகள் மல்லன் என்ற சொல்லை வீரன் என்ற பொருளில் குறிப்பிடுகிறது.
வாள் நுதல் கணவ! மல்லர் ஏறே!- பதிற்றுப்பத்து இதில் மல்லர் என்ற சொல் போர் மறவர் குறிக்கிறது.
அல்லல் அருளால்வார்க்கில்லை வளிவழங்கும்
மல்லன் மாஞா கரி – குறள் 245
இதில் மல்லர் வளம் மிக்கவர் என்று குறிப்பிடப்படுகிறது.
மல்லன் என்ற வார்த்தைக்கு வீரன் என்று பொருள் கொண்டு அன்றைய இலக்கிய வேந்தர்கள் வடித்துள்ளனர். இவ்வாறாக பல சான்றுகள் இலக்கியங்களில் பெறப்பட்டாலும் மல்லர் கம்பம் தமிழர் உடையது என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உள்ளது.

நவீன உலகில் மல்லர் கம்பம் :
நவீனத்தின் முற்றுகையால் பாலகர் முதல் முதுமக்கள் வரை பொருளாதாரம் மற்றும் பகட்டு தேவைகளுக்காக கடிவாளம் கட்டிய குதிரைகளாக இலக்கற்று ஒடிக்கொண்டிருக்கும் இக்காலத்திலும், பார் போற்றும் பாரதத்தின் பண்டைய கலை, கலாச்சாரம், உணவு முறை, மொழி, வாழ்வியல் முறை என மறக்கடிக்கப்பட்ட பொக்கிஷங்களை மீட்டெடுப்பதில் இன்று. பல அறிஞர்கள் முற்பட்டாலும் அவற்றில் மிகச் சிலரே இலக்கை எட்டுகின்றனர். அவ்வகையில் இன்று வரலாற்றின் முக்கிய சுவடுகளை தாங்கிநிற்கும் புதுச்சேரியில், முனைவர், நிஜந்தனன் கணேஷ் எணும் இளைஞன் மற்போர் மீது கொண்ட தீராத காதலால் அந்த போர்கலையின் நுணுக்கங்களை துள்ளியமாக ஆராய்ந்து போர்க் கலை, அதற்கான பயிற்சி முறை, வடிவமைப்பு, உபகரணங்கள் பாதுகாப்பு, செயல் வடிவம் கற்று தேர்ந்ததோடு நின்று விடாமல் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாலகர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் பயிற்றுவித்து இன்று அவர்களை அக்கலையில் நிபுணத்துவம் பெற வைத்துள்ளார்.

மல்லர்கம்பம்:
1990 வாக்கில் “மல்லர்கம்பம் என்பது வெறும் காகிதங்களில் அல்லது வரலாற்று நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்டும் காணாது புறக்கணிக்கப்பட்டு அல்லது மறக்கடிக்கப்பட்டு கிடந்த நிலையில், முனைவர் நிஜந்தனன் கணேசன் அவர்களின் பதின்ம மனதில் அந்த வித்தியாசமானக் கலை ஒரு வித ஆச்சரியத்தையும் வித்தியாசத்தையும், பத்து பன்னிரண்டு அடி உயரம் கொண்ட ஒரு நடப்பட்ட கம்புத்தின் மீது மனித உடல் சுற்றி சுழல்கிறது அந்தரத்தில் ஒற்றை புள்ளியில் சமநிலையில் பிடிமானமின்றி நிற்கிறது, புவியிர்ப்பு விசைக்கு போக்கு காட்டி பறந்து சுழன்று தரையில் மீண்டும் சமநிலைக்கு வந்து சேர்கிறது இத்தகைய கலை யார் மனதைத்தான் ஈர்க்காது?
மல்லர்கம்பம் பயிற்சியின் ஆரம்பநிலையில் ஆசான் அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை எவ்வாறு நன்மை பயக்கிறது என்பதை உணர்ந்து மேலும் பயிற்சியில் ஈடுபட்டு தன்னை மல்லர்கம்பத்தோடு இணைத்துக்கொண்டார்.

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சான்றோர் கூற்றுப்படி மல்லர்கம்பம் வீர விளையாட்டு கலையின் உன்னதத்தை தமிழ் கூறும் நல்லுலகில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையோடு அக்காலத்தே போர்கலை, போர், விரவிளையாட்டுகளில் ஈடுபடுவோரை “ஷத்திரியர்” என்ற இனப்பெயரியில் அழைப்பதை கருத்தில் கொண்டு “ஷத்திரியா அகாதமி” என்ற பாரம்பரிய விளையாட்டு பயிற்சி மையத்தை உருவாக்கி “சிலம்பம், மற்போர், குத்து வரிசை, மல்லர் கம்பம் என பல பாரம்பறிய கலைகளை பயிற்றுவித்து வருகிரார்! . தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகள்! இன்று சர்வதேச நாடுகளின் என் திசைகளிலும் எதிரொளிக்கும் சொல் “யோகா” நோயற்ற வாழ்வின் திறவுகோளாக இன்று உலகம் ஏற்றுக்கொண்ட யோகப்பயிற்சியை, அதன் நன்மைகளை உலகம் முழுவதும் கொண்டு சோர்த்தோடு நில்லாமல் அந்த கலைஞர்களுக்கு உயரிய அங்கீகாரம் வழங்கி வருகிறது, இதனை தொலைநோக்கு பார்வையுடன் அன்றே கணித்த ஆசான் அவர்கள் சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேலாக மகளிர், குழந்தைகள் முதியவர் என அனைவருக்கும் கற்றுத் தருகிறார். “ஏரியல் ஜிம்னாஸ்டிக்” எனும் மேற்கத்திய விளையாட்டு முறைகளையும் விட்டு விடவில்லை, நிற்க, “இக்கலை முழுக்க முழுக்க மல்லர்கம்பம் அசைவுகளுடன் இசைத்திருக்கும் ” ஆம் தன்னிடம் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு உள்ளூர் அல்லது தேசிய அங்கீகாரம் மட்டும் போதாது உலக அளவில் பேசப்பட வேன்டும் என்று எண்ணுகிறார் “ஏரியல் ஜிம்னாஸ்டிக்” எனும் கலை தரையில் படாமல் சுழன்று உடலை வளைந்து கரணம் செய்து கைகள் தரையில் படாமல் சமநிலைக்கு வந்து சேரும் சர்வதேச விளையாட்டையும் கற்பித்து சர்வதேச நிகழ்சிகளிலும் தன் மாணவர்களை பங்குபெற செய்துள்ளார். மேலும் தேசிய அளவிலான பல போட்டிகளில் மாணவர்கள் பல பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் பயிற்சியில் தனிக்கவனம் செலுத்துவ தோடு விளையாட்டுத் துறையில் அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய தன் பலத்துக்கும் மீறி தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும். முன்னின்று செய்வதை பெற்றோர்களை, பார்வையாளர் என அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். வருங்கால பாரதம் வளமான பாரதம் இவ்வாரான அங்கீகாரம் பெற்ற விளையாட்டுகளில் சாதனையாளர்களை உருவாக்கியதன் மூலம் அந்த இளைஞர்களின் எதிர்காலத்தில் மிகப்பெரிய நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளார் ஆசான், அவர் உருவாக்கிய சில நூறு மாணவர்கள் எதிர்காலத்தில் பலநூறு ஆசான் களாக உருவாவர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பண்டைய பாராத நாகரிகம் கலை, கலாச்சரம், தனித்துவம் என முனைவர் நிஜந்தனன் கணேஷ் அவர்கள் கீழ்வானின் ஒளிக்கீற்றால் எழுகிறார், இயற்கையோடு இணைந்த வாழ்வியில் முறை. அறவழி நடத்தல், பெற்றோரை தொழுதல், பெரியவர்களை மதித்தல், ஆசிரியர்களை பின்பற்றுதல் சுத்தம், சுகாதரம் பேணுதல் போன்ற போதனைகளையும் மாணவர்களுக்கு ஷத்திரியா விளையாட்டு பயிற்சி மையத்தின் மூலம் வழங்கி வருகிறார். விளையாட்டு, பயிற்சி, நல்லொழுக்கம் போன்றவை மட்டுமில்லாமல் இளைஞர்களின் தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் அவ்வப்பொழுது பல நிகழ்ச்சிகளை தனது மையத்தின் மூலமாக ஒருங்கிணைத்தும் வருகிறார்.

சாதனைகள்:
சர்வதேச அரங்கில் நேரடியாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் நமது பாரம்பரிய கலைகளை அரங்கேற்றி – அதன் மூலம் பலவேறு பார்வையாளர்கள், பொதுமக்களிடம் இந்த அரிய கலைகளை கொண்டு சேர்த்துள்ளனர் இந்த பயிற்சி மையங்கள் வீரர் வீராங்களைகள். அத்தோடு நில்லாமல் சர்வதேச. அரங்கில் தனக்கான ரசிகர் வட்டத்தையும். உருவாக்கியுள்ளனர். இது குறித்து முனைவர் கணேசன் கூறுகையில் எனது முயற்சியை இத்துடன் நிறுத்தி கொள்ளாமல் சர்வதேச விளையாட்டுச் ஆர்வலர்கள் மத்தியில் நமது பாரம்பரிய கலைகளின் முக்கியத்துவத்தையும் தேவையையும் நிறுவும் வரையில் உழைக்கப்போவுதாகவும் உறுதியளித்துள்ளார். “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டதாய்” என்ற தெய்வப்புலவரின் வாக்குப்படி முனைவர் நிஜந்தனன் கணேஷ் அவர்கள் தாய்க்கும் தந்தைக்கும், தாய்நாட்டிற்கும் மெம் மேலும் பெருமை, சேர்க்க வாழ்கிறார். அவரை பின்பற்றும் மாணவர்களும் அப்படியே.
அப்படிபட்ட பெருமை வாய்ந்த ஆசான் நிஜந்தனன் கணேஷ், ஷத்திரியா அகாதமி மாணவர்களின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.

கட்டுரை ஆக்கம் :
ஜ. பிரகல்யா ஸ்ரீ
சு. நிலேஷ்வர்.
வே, கிரஹதி.
சுஜிதா. செ.
முனைவர் நிஜந்தனன் கணேஷ்

13 Comments

  1. உண்மையில் தமிழர் கலையை அழியாமல் காக்கும் நிஜந்தனன் கணேஷ் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  2. இந்த பாரம்பரிய கலையை அழியாமல் இருக்க உங்களைப்போல் ஆசான்கள் இந்த கலைக்கு தேவை இந்த கலை நம்நாட்டில் மட்டும் அல்ல உலகமுழுவதும் பரவ ஆசானாகிய உங்கள் ஆதரவு அனைத்து மாணவர்களுக்கும் தேவை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் முனைவர் நிஜந்தனன் கணேஷ்.

  3. செய்தி கட்டுரை போல் அல்லாமல், வரலாற்று ஆய்வு கட்டுரைபோல் அமைந்துள்ளது, கோர்வையாகவும் நிழற்படங்களின் அணித்திரட்டலும் முழுமையடைய செய்துள்ளது – பயிற்சியாளர் நிஜந்தன் கணேசன் அவர்களுக்கும், வீரர்களுக்கும் வாழ்த்துகள்!

  4. உங்கள் சேவை தொடர உங்களை வாழ்த்துகிறேன்

  5. Nice and ample explanation about the Mallakhamb art..An Excellent work performing by Dr.Ganesh Master.It is the one n only Academy in Pondicherry practicing Mallakhamb,Aerial Gymnastics, for all ages,especially TULI for Women and so on…He is also a great Mentor for all his students.Today his greatest and most satisfying award is the accomplishment of his students.He has extensively performed within India and abroad.

    KSHATRIYA ACADEMY

  6. “நான்”
    என் மகன்களுக்கு மல்லர் கம்பம்
    கலை சக்திரிய அகதமியில்
    கற்றுகொண்டிருப்பதற்கு
    பெருமைக்கொள்கிறேன்.

  7. My son is getting trained here in Kshatriya academy. We feel blessed to be connected to this place and all the people here.

    KSHATRIYA ACADEMY

  8. It’s very nice & good to be in academy. My son is physically strong & learning more in our KSHATRIYA academy. Thanks

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!