தமிழகம்

நவீன வகுப்பறைகள் திறப்பு விழா

51views
மதுரை மாநகராட்சி  நவீன வகுப்பறைகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திறந்து வைத்தார்.  மதுரை மாநகராட்சி திரு.வி.க.மேல்நிலைப்பள்ளியில், ஹெச்.டி.எப்.சி. வங்கி பங்களிப்புடன் மாநகராட்சியின் ஐந்து பள்ளிகளில் நவீன வகுப்பறைகளை,  மேயர் இந்திராணி பொன்வசந்த் ,  மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் முன்னிலையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,
திறந்து வைத்தார்.  மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 64 தொடக்க, நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும், மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்,
நூலக கட்டிடம், அறிவியல் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஹெச்.டி.எப்.சி வங்கி பங்களிப்புடன் திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா.நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுந்தரராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி  கம்பர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. புதிய நவீன வகுப்பறைகளை முதற்கட்டமாக திரு.வி.க. மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் இதர நான்கு பள்ளிகளின் நவீன வகுப்பறைகளை இப்பள்ளியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக , அமைச்சர், மேயர், ஆணையாளர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நவீன வகுப்பறையில் முக்கிய அம்சங்களான 1) வகுப்பறைகளில் நவீன ஸ்மரர்ட் பேனல்கள் மாணவர்களுக்கான மேசை மற்றும் நாற்காலிகள் வகுப்பறைகளை அழகுப்படுத்துதல் பழுதுபரர்த்தல் மற்றும் வெள்ளை அடித்தல்  2) உள்கட்டமைப்பு பழுதுபரர்த்தல் புதுப்பித்தல் மற்றும் அறிவியல் ஆய்வகத்தை மேம்படுத்துதல் 3) மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறைகளை சீரமைப்புச் செய்தல் 4) சுகாதாரமான தரத்துடன் கூடிய குடிநீர் அடிப்படையில் வழங்குதல் 5) புத்தகங்கள் மற்றும் உள்கட்டமைப்புடன் கூடிய நூலகத்தை மேம்படுத்துதல் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகத்தை சரர்ந்த மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், இவ்விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுக் பொறுப்புக் குழுக்களுக்கு அமைச்சர் அவர்கள் காசோலைகளை வழங்கினரர்.
இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன் கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் மண்டலத்தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, திருமதி.பாண்டிச்செல்வி, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா மாநகராட்சி கல்வி அலுவலர் இநாகேந்திரன் உதவி ஆணையாளர் (பொ) த
வரலெட்சுமி ஹெச்.டி.எப்.சி வங்கி நிர்வாக இயக்குநர் சசிதர் ஜெகதீசன் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் தி சிவசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாநகராட்சி அலுவலர்கள் பள்ளி மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!