கொரோனா தொற்றின் பரவல் காரணமாக இந்தியாவில் பல பகுதிகளும் சினிமா துறைகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் கன்னட திரையுலக முன்னணி நடிகரான யாஷ் கொரோனா தொற்றால் படப்பிடிப்பின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 3000 கன்னட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் ஒன்றரை கோடி ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த மோசமான சூழலில், வலி மற்றும் இழப்புகளை சந்தித்திருக்கும் அவர்களுக்கு இத்தொகை தீர்வாகாது என்றாலும், நம்பிக்கைக்கான வெளிச்சமாக இருக்கும் என நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார்
நடிகர் யாஷ் கேஜிஎப் படம் மூலம் மிகப் பிரபலமானார். இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




