முக்கிய செய்திகள்

கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

தமிழகம்முக்கிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலையினை நாளுக்கு நாள் உயர்த்தி மக்களை வதைத்து வருகிறது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய் 18 காசுகள், டீசல் ஒரு லிட்டர் 83 ரூபாய் 18 காசுகள். கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலை உயர்வு மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும், விலைவாசி கடுமையாக ஏறும். பா.ஜ., ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக குறைந்தாலும், இந்தியச் சந்தைகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. மத்திய அரசின் கடுமையான வரி விதிப்பும், மாநில அரசு...
விளையாட்டு

கிரிக்கெட்டில் பிரகாசிக்க கடின உழைப்பு தேவை: நடராஜன்

இளைஞர்கள் கடினமாக உழைத்தால் கிரிக்கெட் விளையாட்டில் பிரகாசிக்கலாம்,’ என இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கிரிக்கெட் அணி வேக பந்து வீரர் நடராஜன் பேசியபோது, "ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பிய போது, ஊர் மக்கள் திரண்டு அளித்த வரவேற்பை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து, ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, சிறப்பாக விளையாடி தாயகம் திரும்பிய தருணம் மிகவும் நெகழ்ச்சியானது. நாட்டுக்காகவும், நான் பிறந்த சேலம் மண்ணுக்காக பெருமை சேர்த்தமை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது கடவுள் தந்த வரமாக கருதுகிறேன். ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்கு, ஐபிஎல் போட்டிகளில் நான்கு ஆண்டு விளையாடியதில் கிடைத்த அனுபவமே காரணம்....
தமிழகம்

செல்லும் இடமெல்லாம் வரவேற்பு: கமல்

கோவை: பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி: 5வது கட்டமாக கோவையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்து காட்டு கோவை. இந்த பயணத்திற்காக போடப்பட்ட கொடிகள் அகற்றப்பட்டு உள்ளது. கூடுதல் விளம்பரத்தை தந்துள்ளது. அதற்கு அமைச்சர்களுக்கும், உடன் இருந்து பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி. தொடர்ந்து இதுபோன்ற எங்களுக்காக விளம்பரத்தில் பொது ஜன தொடர்பில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆர்வத்தை மக்கள் பணியிலும் காட்டினால் நாங்கள் அரசியலுக்கே வந்திருக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்....
சென்னை

ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் ரசிகர்கள் போராட்டம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்  திடீரென்று உடல்நிலையை காரணமாகக் கூறி அரசியலில் ஈடுபடபோவதில்லை என்று அறிவித்திருந்த நிலையில், அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ரசிகர்கள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர் நடிகா் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கயிருந்தது, அவரது ரசிகா்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பா் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் புதிய கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகக் கூறியிருந்தாா். இந்நிலையில் திடீரென்று உடல்நிலையை காரணமாகக் கூறி அரசியலில் ஈடுபடபோவதில்லை என ரஜினி அறிவித்தாா். தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகா்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.   இதனால் மனமுடைந்த ரஜினி ரசிகா்களில் ஒரு தரப்பினா் சென்னை...
இந்தியா

மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி மருந்தை மாநில மக்கள் அனைவருக்கும் எந்த ஒரு செலவும் இன்றி இலவசமாக வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் தங்கள் அரசு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுளதாவது: மேற்கு வங்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்று கூறியுள்ளது. ஜன.16-ல் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கு வங்க அரசு ஏற்கனவே மாநிலத்தில் முதற்கட்டமாக தடுப்பூசியைப் பெறும் சுகாதார ஊழியர்களின் பட்டியலை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. மேற்கு...
உலகம்

அமெரிக்காவில் விரைவில் குடியுரிமை மசோதா தாக்கல்: ஜோ பைடன்

அமெரிக்காவில் விரைவில் குடியுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். இதுகுறித்து அமெரிக்காவின் டென்வர் மாகாணத்தில் உள்ள வெலிங்டன் நகரில் அவர் பேசினார். பதவியேற்ற நூறாவது நாளுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தான் விளக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் ஆட்சிகாலத்தில் அமெரிக்காவில் குடியேற விரும்பியவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். அமெரிக்காவின் அண்டை நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறி நிரந்தர விசா பெற விரும்புபவர்கள் அதிக கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டி இருந்தது.தற்போது இந்த நிலையை முழுவதுமாக மாற்ற முயன்று வருவதாக ஜோ பைடன் கூறியுள்ளார். கடந்து 2015-ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கருத்து...
1 1,049 1,050 1,051 1,052
Page 1051 of 1052

Right Click & View Source is disabled.

error: Content is protected !!