இந்தியா

மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: மம்தா பானர்ஜி

289views

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி மருந்தை மாநில மக்கள் அனைவருக்கும் எந்த ஒரு செலவும் இன்றி இலவசமாக வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் தங்கள் அரசு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுளதாவது: மேற்கு வங்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்று கூறியுள்ளது.

ஜன.16-ல் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கு வங்க அரசு ஏற்கனவே மாநிலத்தில் முதற்கட்டமாக தடுப்பூசியைப் பெறும் சுகாதார ஊழியர்களின் பட்டியலை மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது மம்தா பானர்ஜி தடுப்பூசியை இலவசமாக வழங்க முடிவெடுத்து சட்டமன்றத் தேர்தலில் ஆதாயம் பெரும் நோக்கில் தான் என பேசப்படுகிறது. ஏற்கனவே பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது, ​பிகார் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கபப்டும் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!