ஆன்மிகம்

கார்த்திகை மாதம் : விளக்கு தானம், சந்தன அபிஷேகம் என்னென்ன செய்யலாம்?

88views
கார்த்திகை மாதம் பற்றிய சிறப்பு தகவல்கள் :
🌟 கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைப்பொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.
🌟 கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்து, வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
🌟 கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின்போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலனை அடைவார்கள்.
🌟 விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய முடியாத மோட்ச நிலையை அடைவார்கள்.
🌟 கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்தால், பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.
🌟 கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.
🌟 கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள்.
🌟 கார்த்திகை பௌர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும், இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.
🌟 கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
🌟 கார்த்திகையில் முருகப்பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🌟 கார்த்திகை பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு. கிரிவலம் செல்லும்பொழுது மழை பெய்தாலோ, அந்த மழையில் நனைந்தாலோ தேவர்களின் ஆசி கிட்டும்.
🌟 கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும். கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.
🌟 கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் எண்ணிலடங்கா பலன்கள் கிடைக்கும். மேலும், பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.
🌟 கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தை கூட பெறலாம்.
🌟 கார்த்திகை மாதம் அனங்க திரயோதசி தினத்தன்று ரதி-மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடைபெறும்.
🌟 கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவபெருமானின் அருள் கிடைக்கும்.
🌟 ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் தீபத்திருநாளன்று சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!