தமிழகம்

தென்காசியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்; கலெக்டரிடம் முக்கிய கோரிக்கை.

197views
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (AICCTU) தென்காசி மாவட்டம் சார்பில் தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் செங்கோட்டை நகராட்சியில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் இதர பணி உபகரணங்கள் முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் AICCTU தென்காசி மாவட்ட நிர்வாகிகள் கெளரவ தலைவர் ஐயப்பன், தலைவர் அயூப்கான், பொதுச் செயலாளர் வேல்முருகன், பொருளாளர் குருசாமி, கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி செங்கோட்டை தாலுகா செயலாளர் சுப்பிரமணியன், செங்கோட்டை நகராட்சி துப்புறவு சங்க தலைவர் முத்துகிருஷ்ணண், செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவில் செங்கோட்டை நகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட துப்புறவு தூய்மை பணியாளர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக AVM ஒப்பந்ததாரர்கள் மூலம் தூய்மைப்பணி செய்து வருகின்றார்கள். ஆனால் மாதம் மாதம் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் 2022 அக்டோபர் மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.
இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டும் நடவடிக்கை ஏதுமில்லை. AVM ஒப்பந்தக்காரர்களுக்கு கடந்த சில மாதங்களாக உரிய தொகை செங்கோட்டை நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை என தெரிகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் மிகவும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும் தூய்மைப்பணியை தொய்வின்றி மேற்கொள்ள ஏதுவாக தள்ளுவண்டி மண்வெட்டி, கையுறை, காலுறை, முக கவசம், சோப்பு, வாளி ஆகியவை முறையாக வழங்கப்பட வேண்டும். மேலும் சரிவர சம்பளம் வழங்கிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!