‘வங்கக்கடலில் நாளை மறுநாள் குறைந்த காற்றழுத்த பகுதி’ மிக கனமழைக்கு வாய்ப்பு!
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்ப சலனம் காரணமாக காரணமாக இன்று நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி ,காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது.இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், போரூர், அசோக் நகர், வடபழனி...
