மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி விரைவில் தொடங்கும்
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மாதவரம் - சிறுசேரி தடத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. சென்னையில் 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி - விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. மற்ற தடங்களைக் காட்டிலும் மாதவரம் - சிறுசேரி தடத்தில்தான் மொத்தமுள்ள 45 கி.மீ தூரத்தில் அதிகபட்சமாக 26 கி.மீ தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைகிறது. இப்பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் - சிறுசேரி இடையே புரசைவாக்கம், அயனாவரம், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி வழியாக இந்த தடம் அமைக்கிறது. மற்ற தடங்களைக் காட்டிலும் இந்த தடத்தில் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள்...
