நடிப்புலக சரித்திர நாயகன் சிவாஜி கணேசன் பிறந்த நாள், இன்று
தமிழ் திரையுலகில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்து எல்லோராலும் நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். அவரின் 93வது பிறந்த நாளான இன்று அவர் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை பார்க்கலாம். இன்றும் கோடம்பாக்கத்தை நோக்கி நடிப்பு கனவுகளோடு படையெடுக்கும் பலருக்கும் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர் சிவாஜி கணேசன். 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தஞ்சாவூர் அருகில் உள்ள சூரக்கோட்டை என்ற கிராமத்தில் கணேசனாக பிறந்த இவர், இளம் வயது முதலே நடிப்பின் பால் ஈர்க்கப்பட்டு மேடை நாடகங்களில் எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கினார். பேரறிஞர் அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடித்த இவரது நடிப்புத்திறனை பார்த்து வியந்த தந்தை பெரியார், 'சிவாஜி' கணேசன்' என்று மேடையில் அழைத்தார். அன்று பெரியார் உச்சரித்த அந்த...
