தனுஷ்கோடியில் நவீன கலங்கரை விளக்கப் பணிகள் தீவிரம்: இலங்கையின் தலைமன்னார் வரை ஒளி தெரியும்
ராமேசுவரம் அருகே தனுஷ் கோடியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் மூலம் புதிய கலங்கரை விளக்கம் நவீன ரேடார் கருவி வசதியுடன் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பழவேற்காடு தொடங்கி, சென்னை மெரினா, மாமல்லபுரம், பாண்டிச்சேரி, பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், கள்ளிமேடு, கோடியக்கரை, அம்மாபட்டினம், பாசிப்பட்டினம், பாம்பன், ராமேசுவரம், கீழக்கரை, பாண்டியன் தீவு (தூத்துக்குடி மாவட்டம்), மணப்பாடு, கன்னியா குமரி, முட்டம் ஆகிய இடங்களில் கலங்கரை விளக்கங்கள் உள்ளன. புயலால் அழிந்து போன தனுஷ்கோடியை மீட்டெடுக்கும் வகையிலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், இந்திய எல்லைப் பகுதியான மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்கரைப் பகுதிகளை கண்காணிப்பதற்காகவும் தனுஷ் கோடியில் புதிய கலங்கரை விளக்கம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சுக்...
