தமிழகம்

தமிழகம்

பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்குகிறது. இதனை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த டிச.25ம் தேதி ஒருநாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 597ஆக பதிவாகியிருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 12,895ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்திருப்பது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இப்பணி கடந்த ஜன.16 தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக சனிக் கிழமை 18வது தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதைக் கடந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி இன்று தொடங்கப்படுகிறது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியதாவது, "கடந்த 2021...
தமிழகம்

சென்னை ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி ஆளுநர், மத்திய அமைச்சர் தமிழக ஆளுநருடன் சந்திப்பு: மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். சென்னை கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவரைத் தொடர்ந்து, ஆளுநர் ரவியை, மத்திய தகவல் மற்றும்ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பதிவில், ''தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னையில் சந்தித்தேன். அவரது பரந்த அனுபவம், நமதுமாநிலத்தின் நலனுக்காக மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குகிறது'' என்று தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக புகார் அளித்தது...
தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு??.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் ஒமைரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய கட்டுபாடு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் வைரஸ் பரவல் குறையாததால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுபாடுகள் ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரவு நேரங்களில் ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் பக்தர்களுக்கு தடை, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அண்மையில் விதித்தது. அந்த வகையில் கடந்த...
தமிழகம்

பூஸ்டர் தடுப்பூசி திட்டம் நாளை தொடக்கம்; இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜன. 4-வது வாரத்தில் கலந்தாய்வு: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 4-வது வாரம் தொடங்குகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அடையாறு மண்டலம், 175-வது வார்டு 17-வது குறுக்குச் சாலையில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்ற மெகாதடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசிபோடும் பணியை நாளை (ஜன.10)பட்டினம்பாக்கம் இமேஜ் அரங்கில்முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும்பணி நடைபெறும். அந்தவகையில் தமிழகத்தில் 35 லட்சத்து 46ஆயிரம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களாகக் கண்டறியப்பட் டுள்ளனர். 27 சதவீத நீட் இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இதன்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்களுக்கு கலந்தாய்வை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம்அறிவித்திருக்கிறது. அந்தவகையில் அகில இந்திய ஒதுக்கீட்டு...
தமிழகம்

“அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது” – மு.க.ஸ்டாலின் உறுதி!

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி உள்ளனர். குறிப்பாக பல இடங்களில் கருணாநிதியின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில் கலைஞரின் பெயரை மறைக்கும் வகையில் செடி, கொடிகளை நட்டு வைத்தனர். இராணி மேரி கல்லூரியிலும் கலைஞர் பெயர் மறைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் புதியதாக கட்டப்பட்ட சட்டசபை கட்டிடத்தை ஆஸ்பத்திரியாக மாற்றினார்கள். கலைஞர் கொண்டுவந்த சமத்துவபுரம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டங்களும் முடக்கப்பட்டன. இப்படி தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்டது பற்றி பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் நாங்கள் அதுபோன்று செயல்படவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. அதனால் தான் ஜெயலலிதா நினைவிடத்தை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகிறார்கள். அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. நேற்று இந்த சபையில்...
தமிழகம்

கூட்டுறவு சங்க இயக்குநர்களின் பதவிக்காலம் 3 ஆண்டாக குறைப்பு; பேரவையில் மசோதா நிறைவேற்றம்: எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு

கூட்டுறவு சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வகை செய்யும் சட்டமுன்வடிவு பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வகை செய்யும் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று அறிமுகம் செய்தார். இந்தசட்ட முன்வடிவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு இந்த சட்ட முன்வடிவு பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களிடம்...
தமிழகம்

‘ஸ்டெர்லைட் ஆலையில் விரைவில் உற்பத்தி துவங்கும்’

''ஸ்டெர்லைட் ஆலையில் விரைவில் தாமிர உற்பத்தியை துவக்குவோம்,'' என, ஆலையின் தலைமை இயக்கக அதிகாரி ஏ.சுமதி தெரிவித்தார்.நேற்று அவர் அளித்த பேட்டி: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யக்கூடிய திறனுடையது. இதை, எட்டு லட்சம் டன்னாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்தபோது, மக்கள் எதிர்ப்பால் 2018ல்ஆலைமூடப்பட்டது. ஆலைக்கு துாத்துக்குடி மக்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை; அவர்கள் ஆலைக்கு ஆதரவாகவே உள்ளனர். அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள், குடிநீர், வேலை வாய்ப்பு, கல்வி வசதி, சுகாதாரம் ஆகியவற்றை, தற்போது வரை ஸ்டெர்லைட் ஆலை செய்து வருகிறது. இதுதவிர, அப்பகுதி மக்களின் திறனை மேம்படுத்தும் திட்டங்களையும் செயல்படுத்தி, அதன் வாயிலாகவும் வேலைவாய்ப்பை, ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள, 10 ஆயிரம் மாணவர்களுக்கு, 10 கோடி ரூபாய்...
தமிழகம்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவு- மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருந்தது. தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை செயல்படுத்தும் வகையில் சாலைகள், மேம்பாலங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. சென்னையில் மட்டுமே சுமார் 10,000 போலீசார் இரவு நேர ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டங்களிலும்...
தமிழகம்

வேகமாக பரவுகிறது ஒமைக்ரான்: சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும்.சென்னை, செங்கல்பட்டு, வேலூர்உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமோ, பதட்டமோ அடையத் தேவையில்லை. தொற்று அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே தொற்று கண்டறியப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் சுவாச உதவி இதுவரை தேவைப்படவில்லை. அதேபோல், தொற்றுஉறுதியானவர்களுக்கு நுரையீரல்தொற்றும் இதுவரை ஏற்படவில்லை. போதுமான அளவு படுக்கைகள், ஆக்ஸிஜன், மருந்துகள் கையிருப்பில் உள்ளன. பேருந்துகளில் பயணம் செய்யும் போது முகக்கவசம் கட்டாயம்அணிய வேண்டும். ஓட்டுநர், நடத்துநர்...
தமிழகம்

சென்னையில் இன்று முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

சென்னையில் இன்று முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் அறிவுறுத்தல்களின் படி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் இன்று முதல் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 05.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயக்கப்படும். நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும் மற்ற...
1 504 505 506 507 508 563
Page 506 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!